Friday 31 August 2018

மர்ம கத்தி


மர்ம கத்தி ...

             ஏற்கனவே சொன்னது போல் கதை முழுதுமே கனவே ..
இது விஞ்ஞான கதை அல்ல ...
                     என்னை பொறுத்தவரை மெட்டாபிசிக்ஸ் கதையை நடத்துகிறது ..
                         கனவுலகினை இக்கதை ஒரு இணை பிரபஞ்சமாக கையாள்கிறது ...(parallel universe ). உறக்கம் அதற்கான போர்ட்டல் .
                                            நமது பிரபஞ்சத்தில் காலம் என்பது ஒரு மாயை..அது சார்புடையது ...
                          ஐன்ஸ்டீனின் ஸ்பெஷல் தியரி ஆப் ரிலேட்டிவிட்டி/ஜெனரல் தியரி ஆப் ரிலேட்டிவிட்டி காலத்தில் முன்னோக்கி /பின்னோக்கி பயணிப்பது பற்றி வழிவகைகள் இருப்பது பற்றி சொன்னாலும் அவற்றை செயலாக்கம் செய்வது நடைமுறையில் இயலாத காரியம் ..
                 நமது கதையில் உள்ள கனவுலகான இணை பிரபஞ்சத்தில்
காலத்தின் பின்னோக்கி செல்ல
ஒளியின் வேகத்தினை விட அதிக வேகத்தில் பயணிக்கவேண்டும்
காலத்தினை கிராவிடேஷனல் விசையை பயன்படுத்தி லூப்களாக மடக்கி பின் செல்லவேண்டும்
              போன்ற சாத்தியமேயில்லாத கட்டுப்பாடுகள் இல்லை ..
              மெட்டாபிசிக்ஸ் –ன் மனம்,உடல் பற்றிய கிளை சித்தாந்தங்களை அடியொற்றி எழுதப்பட்ட இக்கதை இருமனிதர்கள் பருப்பொருளாகவே காலத்தின் பின்னோக்கி பயணிப்பதாக அதாவது கனவுலக பிரஜைகளாக இருப்பினும் வர்ணனை செய்கிறது ....
          இது கனவுலகம் என்பது ஒரு இணை பிரபஞ்சம்  என்றால் மட்டுமே சாத்தியம் ...
                     இவர்கள் போட்டு  சென்ற ஆடையை விட்டு பல நூற்றாண்டுகளுக்கு முன்  அணிந்த ஆடையை திரும்பி அணிந்து வருவதும் .
   ரோலனின் கத்தி ரோஜரின் கூடவே பயணிப்பதும் இக்காரணத்தினால்தான்..
காலத்தில் பின்னோக்கி/முன்னோக்கி  பயணிக்க ஒளியின் வேகத்தில் பயணிக்கவேண்டும் ..
      உதாரணமாக ரோலனின் கத்தியும் ஒளியின் வேகத்தில் முன்னோக்கி பயணிக்குமாயின் நிறை –சக்தி கோட்பாட்டின்படி கத்தியின் நிறை முடிவிலி (infinite ) என அதிகரிக்கும் ...இக்கத்தியை நகர்த்துவதற்கான சக்தியின் அளவும் முடிவிலி என அதிகரிக்கும் ...இது நடைமுறைக்கு ஒவ்வாதது ..
                               இதெல்லாம் நமது பிரபஞ்சத்தில் ..
கனவுநிலையில் உணர்நிலையில் உள்ளதாக காண்பிக்கப்படும் நமது ரோஜர் மற்றும் பில்லுக்கு இக்கோட்பாடுகள் இணை பிரபஞ்சவாசிகள் என்பதால் பொருந்தாது..
                           ரோஜர் மற்றும் பில் காலத்தில் பின்னோக்கி செல்ல கால இயந்திரம் தேவையில்லை என்பது கதை உணர்த்தும் செய்தி ..
                          இருபதாம் நூற்றாண்டு செல்லவேண்டும் என்ற எண்ணத்துடன் உறங்க துவங்கும் அவர்கள் மறுபடியும் கனவுலகின் வாயிலாகவே இருபதாம் நூற்றாண்டை முன்னோக்கி பயணித்து வந்தடைகிறார்கள் ..
                     பலசமயங்களில் விஞ்ஞானம் தனது எல்லையை தொட்டு நிற்பதை  தாண்டி விளக்கமளிக்க மெட்டாபிசிக்ஸ் முயன்று இருக்கிறது ...
                    நவீன விஞ்ஞானம் மெட்டாபிசிக்ஸ்-தத்துவத்தை வறட்டு வேதாந்தம் என்றே அழைக்க முற்படுகிறது ....

              நாமும் உறங்கி முயற்சி செய்து பார்ப்போம் ..
கனவுலகின் பிரஜைகளானால் காலத்தின் முன்னோக்கி சென்று இரத்தப்படலம் வண்ண இதழ்களை ,டைனமைட் இதழ்களை எடிட்டர் அச்சிட்டு முதல் பிரதியை ரசித்து கொண்டு இருக்கும்போது நாமும் அருகில் போய் ரசிக்கலாம் ...
 காலையில் எழும்போது படுக்கையின் கீழ் டைனமைட் இதழின் டஸ்ட் கவர் கிடைக்குமாயின் அதிசயிக்க வேண்டாம் ...

பின் குறிப்பு : வேறுவித சிந்தனைகள் நண்பர்கள் யாருக்கும் இருக்குமாயின் முன்வைக்கலாம் ...                         

Thursday 30 August 2018

image link trial





< a href = "https://www.blogger.com/blogger.g?blogID=2650373937242161235#editor/target=post;postID=7686976560605379605;onPublishedMenu=allposts;onClosedMenu=allposts;postNum=0;src=postname"இங்க தொடுங்க </a>