Monday, 31 August 2015

SAGA....VOULME 1

சாகா......முதல் பகுதி
பிரபஞ்ச வெளியில் லேன்ட்ஃபால்(LAND FALL) ஒரு பெரிய கிரகம்..அதனுடைய சாட்டலைட் ரேத்(WREATH).....
இருவருக்கும் நெடுநாளாக யுத்தம் நடந்து கொண்டு இருக்கிறது.
லேன்ட்ஃபால் வாசிகள் அதி நவீன தொழில்நுட்ப ஆயுதங்கள் உபயோகிக்கும் வர்க்கம்...
ரேத் வாசிகளோ மாஜிக் செய்யும் சக்தி உள்ளவர்கள்.....
சண்டை பிரபஞ்ச வெளியில் வெவ்வேறு கிரகங்களில் நடக்கிறது,,காரணம்
சண்டையில்  லேன்ட்ஃபால் ரேத் எது அழிவுற்றாலும் பிறிதொன்று தனது சுற்றுபாதையை விட்டு விலகி சென்று விடும் என்பதே.......
சண்டை எந்த கிரகத்தில் நடந்தாலும் அந்த கிரகவாசிகள் ஏதாவது ஒரு சைடை தேர்ந்து எடுக்க வேண்டிய நெருக்கடி....
இந்த சூழலில் கிளீவ்(CLEAVE) என்ற கிரகத்தில் போர் கைதியாக இருக்கும் மார்க்கோ (MARCO)என்ற ரேத் வாசிக்கும் அவனின் காவல் ராணுவ அதிகாரி அலானா(ALANA) என்ற லேன்ட்ஃபால் பிரஜைக்கும் காதல் உண்டாகிறது .
சிறை வளாகத்தில் இருந்து தப்பித்து இருவரும் அதே கிரகத்தின் இடுக்குகளில் மறைந்து வாழ்கின்றனர்.அப்போது ஹேசல்(HAZEL) என்ற குழந்தை அவர்களுக்கு பிறக்கிறது...
இந்த விவகாரம் பற்றி அறிந்த லேன்ட்ஃபால் தரப்பு  அங்கமான ரோபோ கிங்டம் சினம் கொள்கிறது.இவர்களை வேட்டையாட பிரின்ஸ் ரோபோ IV –ஐ அனுப்புகிறது.
ரேத் சைடின் உயர்மட்ட அதிகாரிகள் பிரிவும் கோபமுற்று த வில்(THE WILL),ஸ்டாக்(STALK) என இரண்டு கொலையாளிகளை மார்க்கோ ,அலானா இருவரையும் கொல்ல அனுப்புகிறது....
ஒரு மேப் உதவியோடு கிளீவ் கிரகம் விட்டு தப்பி செல்ல முயலும் காதலர்கள் வழியில் ஒரு கானகத்தில் ஸ்டாக்கை எதிர்கொள்கின்றனர்.
ஸ்டாக் மார்கோவை மரண காயபடுத்துகிறாள்.
அந்த நேரம் அங்கு வரும் போரினால் உயிர்இழந்த குழந்தைகள் ஆவி கூட்டம் கண்டு ஸ்டாக் அந்த இடத்தை விட்டு விலகி செல்கிறாள்.
இந்த ஆவிகள் பயங்கரமான மாய உருவெளி தோற்றங்களை காண்பவர் சிந்தையில் ஏற்படுத்தும் வல்லமை உள்ளவை..
இசபெல்(IZABEL) எனும் ஒரு சிறு வயது பெண்ணின் ஆவி (இசபெல் கண்ணி
வெடியால் இடுப்புக்கு கீழ் சிதறுண்டு இறந்தவள்)அலனாவுடன் நட்பு கொள்கிறது..மார்கோவை மரணத்திளிருந்து காப்பாற்ற தனது மகள் ஹேசல் ஆன்மாவுடன் இசபெல் பகிர்ந்து கொள்ள அலானா சம்மதிக்கிறாள்..
இதற்கிடையில் வில் ஒரு விபச்சார விடுதியில் இருந்து ஒரு ஆறு வயது சிறுமியை மீட்க எண்ணுகிறான்.....
மீண்டும் அலானா மார்கோ ஸ்டாக்கை எதிர்கொள்கின்றனர்.அப்போது அங்கு வரும் பிரின்ஸ் ரோபோ IV –வால் ஸ்டாக் கொல்லபடுகிறாள்
தப்பி செல்லும் அலானா குழு ஒரு ராக்கெட்டில் கிளீவ் விட்டு அகலுகின்றனர்.
மாய சக்தியினால் அந்த ராக்கெட்டுக்கு வருகின்றனர் மார்கோவின் பெற்றோர்கள். இசபெல்லை தவறாக கருதி மார்கோவின் தாய் அவளை பிரபஞ்ச வெளியின் ஒரு மூலைக்கு அனுப்பி விடுகிறாள்..

பகுதி ஒன்று நிறைவு.........

பியோனா ஸ்டேபில்ஸ்(FIONA STAPLES) படங்கள் காண கண் கோடி வேண்டும்.....

கதாசிரியர் BRIAN K.VAUGHAN 

பதிப்பகம்......IMAGE....

A PERFECT BLEND OF FANTASY AND SCI-FI..........















No comments:

Post a Comment