Thursday, 12 November 2015

SAM ZABEL AND THE MAGIC PEN

Foreword…………………………………
பலவருடங்களாகவே பலரையும் போல வருடத்திற்கு ஒருமுறையாவது கல்கியின் பொன்னியின் செல்வனை ஐந்து பாகங்களையும் படித்து விடுவது வழக்கம்.....
வீராணம் ஏரிகரையிலிருந்து வந்தியதேவன் குதிரையினோடே கடம்பூர் மாளிகை, அரசலாறு,குடமுருட்டி,தஞ்சாவூர்.பழையாறை மற்றும்.இலங்கை, என பல மாளிகைகள், நிலவறைகள்.சுரங்க பாதைகள், சீறும் கடல்,புயல்.என் எல்லாவற்றிலும் வந்திய தேவனுடன் உடன் இருப்பது போன்று பிரமை ஏற்படும்.....
கதையின் தாக்கம் இல்லாதபொழுதுகளில் கல்கி இதனை மந்திர எழுது கோலால் எழுதியிருப்பாரோ என எண்ண தோன்றும்........
Chapter……………………….
                                     SAM ZABEL AND THE MAGIC PEN
Author / CREATOR…..DYLAN HORROCKS
PUBLISHERS…..FANTAGRAPHICS
RELEASED……DECEMBER..2014
SAM ZABEL  ஒரு கார்டூனிஸ்ட்/ கதாசிரியர்....ஏற்கனவே ஒரு அற்புதமான படைப்பை கொடுத்த நிலையில் சிலசமயம் எழுத்தாளர்களுக்கு ஏற்படும் எண்ணத்தடை காரணமாக அடுத்த படைப்பில் ஈடுபட இயலாமல் போகிறது..
மன அழுத்தம்,மனச்சோர்வு போன்றவைகளால் அவதியுறும் ஸாம் பிழைப்பை நடத்த வேண்டாவெறுப்பாக பிரபல பதிப்பகத்தின் சூப்பர் ஹீரோயின் கதை எழுதி காலம் தள்ளுகிறார்.....
( இந்த கதாபாத்திரம் டைலன் ஹோரோக்ஸ்- ன் நிஜ வாழ்வை பிரதிபலிப்பதால் இதனை ஒருமாதிரியான semi autobiography என கருதலாம்.)


கதையின் முதல் சேப்டரின் தலைப்பு.
இதைஉணர்த்துகிறது...ANHEDONIA…MEANING  inability to experience pleasure from activities usually found enjoyable, e.g. exercise, hobbies, music, sexual activities or social interactions
21- ம் நூற்றாண்டின் இலக்கியங்கள் என்ற கருத்தோடு நடக்கும் ஒரு கருத்தரங்கில் ஸாம் இளம்பெண்மணியானஅலைஸ் ப்ரவுன் என்ற வெப்காமிக் கார்டூனிஸ்டை சந்திக்க நேரிடுகிறது...
ஈவான் ரைஸ் என்ற காமிக்ஸ் எழுத்தாளரை பற்றி அலைஸ் சொல்ல அவரது ஒரு புத்தகமான the king of mars எனும் புத்தகத்தை ஒரு பழைய புத்தக கடையில் பெறும் ஸாம் அதை படித்து கொண்டிருக்கும்போது தும்ம.......
அந்த மாயாஜாலம் நிகழ்கிறது......
ஸாம் தான் படித்து கொண்டிருந்த செவ்வாய் கிரகத்துக்கே வந்துவிட்டு இருப்பதை உணர்கிறார்......அங்கு அப்போது தோன்றும் ஒரு பூதம் மாதிரியான உருவத்தை சமாளிக்கும் சாமின் முன்பு மிக்கி என்னும் ஓர் இளம்பெண் தோன்றி தனது மந்திர பூட்ஸ்களின் உதவியால் ஸாம்-ஐ தன்னை தொற்றிகொள்ள செய்து பறந்து செல்கிறாள்....
பிறகு மிக்கியின் மூலமாக ஸாம்-க்கு உண்மை தெரிய வருகிறது
 the king of mars எனும் அந்த புத்தகம் மந்திர பேனா ஒன்றால் எழுதப்பட்டது.அதன் பக்கங்களின் ஏதேனும்ஒன்றை அருகே வைத்து மூச்சு விட்டாலே குறிப்பிட்ட பக்கத்தில் நடக்கும் காலகட்டத்தில் கதைக்குள்ளே மனிதர் உள்ளே நுழைந்துவிடுவார்....
அவர் கார்டூனிஸ்ட் என அறியப்பட்டவுடன் செவ்வாய்கிரகவாசிகள் ஸாம்-க்கு மன்னர் என பட்டம் சூட்டி கிரீடம் அணிவிக்கின்றனர்...
இதை விரும்பாத ஸாம் மிக்கியின் மூலம் இந்த கதையை எழுதிய ஈவான் ரைசை சந்தித்து உண்மையை கூறுகிறனர்...
இந்த பேனா கிடைத்த கதையை ஈவான் சொல்கின்றார்.........
ஈவானை செவ்வாய்க்கு அனுப்பிவிட்டு புத்தகத்தின் gutterspace-மூலமாக வெளியேறும் ஸாம் பின்னர் queen of venus என்ற புத்தகத்தின் மூலம் வீனஸ் கிரகம் வரும்போது அங்கு அலைஸ் ராணியாக இருப்பதை பார்த்து வியப்படைகிறார்..
பின்னர் ஸாம், அலைஸ். மிக்கி மூவரும் மந்திர பேனாவால் எழுதப்பட்ட பல்வேறு காமிக்ஸ்களில் நுழைந்து பயணித்து பற்பல அனுபவம் பெறுகிறார்கள்.

கதையில் வில்லனும் உண்டு.........
அந்த மந்திரபேனா சாமுக்கு கிடைக்கிறது....ஆனால் அதை அவர் அலைசிடம் கொடுத்து விடுகிறார்...
படிக்க அற்புதமான கதை.......
பின்னுரை....உண்மையில் ஒரு வாசகனை கதையினுள்ளே ஜீவித்துஇருக்க செய்ய மந்திரபேனா ஏதும் அவசியமில்லை.என ஸாம் உணர்ந்ததாகவே. தோன்றுகிறது
கல்கியின் எழுத்துக்கள் இதனையே உணர்த்துகின்றன......


இந்த புத்தகத்தை பரிந்துரைத்த விஸ்வாவிற்கு நன்றிகள் பல.....!!!!!!!!!!




No comments:

Post a Comment