Wednesday, 15 June 2016

MARCH

MARCH BOOK 1& 2 (OF MARCH TRILOGY)

AUTHOR…..JOHN LEWIS & ANDREW AYDIN

ARTIST………NATE POWELL

YEAR RELEASED…BOOK 1 ( 2013), BOOK2 (2015)

GENRE….MEMOIR,SEMI AUTOBIOGRAPHY

PUBLISHERS………TOP SHELF

நிற பேதம், இன பேதம் என்பன எல்லா நாடுகளிலும் ஏதாவது ஒரு பேரில் உலவி கொண்டுதான் இருக்கிறது.....
ஜார்ஜியா மாகாணத்தின் ஐந்தாவது மாவட்ட பிரதிநிதியாக 1986-ல் தேர்ந்தெடுக்கபட்டு இன்று வரை அப்பதவி வகிக்கும் ஜான் லூயிஸ் அமெரிக்க மத்திய , மாகாண அரசுகளுக்கு எதிரான தனது சிவில், மனித உரிமை போராட்ட பங்களிப்பு பற்றி, அப்போராட்டங்களை  பற்றி ஆண்ட்ரூ அய்டின் உதவியுடன் எழுதியுள்ள கிராபிக் நாவல்தான் இது........ 

ஆட்டோபயோகிராபி என்றவுடன் சற்று ஆயாசம் ஏற்படுத்தும் என்றுதானே நினைக்கிறீர்கள் ? உடனே முடிவை மாற்றி கொள்ளுங்கள்.....முதல் பாகத்தை ஒரே மூச்சில் படிக்க முடிந்தது....காமிக்ஸ் என்ற வடிவத்தின் மிக பெரிய சக்தி இது......(நூல் வடிவில் இல்லாது).....
முதல் பாகத்தில் ஜானின் இளமை பருவம்,நிற பேதம் காரணமாக தனி பள்ளி,மார்ட்டின் லூதர் கிங் ஜூனியர் உடன் அறிமுகம் ,நாஷ்வில் கிராம மாணவர் இயக்கத்தில் பங்கெடுத்து வன்முறையில்லா முறையில் உணவு விடுதிகளில் வெள்ளையருடன் சம உரிமை கோருதல்
முழுக்க, முழுக்க காந்தீய கோட்பாடுகள் பின்பற்றியே போராட்டங்கள்....

பாகம் இரண்டில் நிறவெறி அதிகம் உள்ள தெற்கு நோக்கிய பஸ் பயணம், உயர் வெள்ளை அதிகாரிகளின் துவேஷம், காவல் துறையின் அத்து மீறிய பலப்பிரயோகம், சிறைவாசம். பல சகாக்களின் உயிர் இழப்பு, இயக்கத்தின் உள்ளே நிலவிய உட்பூசல்கள் என பல வரலாற்று சம்பவங்கள்   
இவை அனைத்தும் 1963-ல் நடைபெற்ற வாஷிங்டனை நோக்கிய வேலை,சமூக சமநீதி வேண்டி ஆறு பெருந்தலைவர்கள்(ஜானும் இதில் அடக்கம்) தலைமையில் நடத்த பெற்ற பேரணியை மையமாக கொண்டே எழுதப்பட்டுள்ளது.......................
கறுப்பினத்தவர்களால் நடத்தபெற்ற இவ்வியக்கத்தில் பல கலப்பின,கலப்பினமற்ற வெள்ளையர்களும் பங்கு பெற்றனர்................
சுயசரிதை காமிக்ஸ்தானே....சித்திரங்கள் எப்படியோ என நினைக்க வேண்டாம்....
EISNER,IGNATZ  அவார்டுகள் பெற்ற NATE POWELL –ன் ஓவியங்கள் உயிரூட்டமுள்ளவை...................................

அமெரிக்க மாணாக்கர்கள் மட்டுமின்றி உலக வரலாற்றில் ஆர்வமுள்ளவர்கள்,சர்வதேச மாணவர்கள் அனைவரும் இதை மிகவும் ரசிப்பார்கள் என்பதில் ஐயமில்லை................................  






















Tuesday, 2 February 2016

DESCENDER

DESCENDER……………………… TIN STARS

AUTHOR………….JEFF LEMIERE

ARTIST………….DUSTIN NGUYEN

PUBLISHER…..IMAGE…..

YEAR RELEASED………….SEPTEMBER 2015

தொலைவானதொரு எதிர்காலத்தில் ...........
ஒன்பது கிரகங்கள் அடங்கிய கூட்டமைப்பு.....UGC(UNITED GALACTIC COUNCIL)
UGC தலைமையகம் உள்ள இடம் PLANET NIYRATA
திடீரென ஒருநாள் ஒரு உபகிரகம் அளவுக்கு பெரிதான ரோபோக்கள்( இவை  பின்னர் HARVESTERS என அழைக்கபடுகின்றன) இந்த ஒன்பது கிரகங்களின் சுற்றுபாதையில் ஒரே நேரத்தில் தோன்றி பேரழிவை ஏற்படுத்துகின்றன.....
இந்த சம்பவத்துக்கு பின் பல விரும்பத்தகாத மாற்றங்கள் நிகழ்கின்றன...
 PLANET NIYRATA –உடன் பிற கிரகங்களுக்கு இருந்த சுமுக உறவு சீர்குலைகிறது.
இந்த அழிவிலிருந்து காப்பாற்றும் பொறுப்பிலிருந்து PLANET NIYRATA தவறிவிட்டதாக  ஏனைய கிரகங்கள் நினைக்கின்றன......
ரோபோக்கள் ஹார்வெஸ்டர்ஸ் மூலம் கட்டுபடுத்தபடலாம் என்ற அச்சம் காரணமாக அவை முற்றிலும் அழிக்கபடுகின்றன.......(ROBOTIC GENOCIDE)
ரோபோக்கள் எந்த வடிவில் இருப்பினும் அவற்றை அழிக்க ஸ்கை ஸ்காராப்பர்ஸ் எனும் கும்பல் அலைகிறது....இவற்றின் பின்னணியில் சில கிரகங்கள் இருக்கின்றன.

ஹார்வெஸ்டர்ஸ் தோன்றி பத்து வருடங்கள் கழித்து...........
DIRISHU 6 என்ற கிரகத்தின் துணைகோளில் கனிமசுரங்கம் பல அமைந்துள்ள குடியிருப்பு பகுதியில் TIM -21 என்ற குழந்தைகளுக்கான கம்பானியன் ரோபோ ஸ்லீபிங் மோடிலிருந்து கண் விழிக்கிறது......
பண்டிட் என அழைக்கப்படும் ஒரு ரோபோ நாயினை சரி செய்து கூட்டி செல்லும் டிம் குடியிருப்பு காலனியில் அனைவரும் மடிந்து விட்டதை உணர்ந்து வெளி உலகுடன் தொடர்பு கொள்ள முயல்கிறது.....
டிம் அனுப்பும் தகவலை பெறும்  PLANET NIYRATA –வின் ராணுவ பிரிவு கேப்டன் டெல்சா தலைமையில் ஒரு குழுவை DIRISHU 6 சுரங்க காலனியை நோக்கி அனுப்பி வைக்கிறது....இதில் டிம்மை வடிவமைத்த ரோபோ விஞ்ஞானி ஜின் குவானும் அடக்கம்.......
இடையே டிம்மின் மெமரி மெதுவாக புத்துணர்வு பெற துவங்க தான் மிசஸ் டாவர்ஸ் மகனான ஆன்டி டாவார்ஸ் க்கு கம்பானியன் ரோபோவாக வந்ததை நினைவு கொள்ளும் டிம் அங்கிருக்கும் கணினி மூலம் ஹார்வஸ்டர்ஸ் வருகை மற்றும் தனக்கிருக்கும் அபாயம் குறித்து அறிய நேருகிறது.......
டெல்சா குழுவுக்கு முன்னரே சுரங்க காலனியை வந்தடையும் ஸ்கை ஸ்காராப்பர்ஸ் கும்பல் ஒன்று டிம்மை வளைக்க முயல தப்பி பிழைத்த சுரங்கம் தோண்டும் டிரில்லர் ரோபோ ஒன்று இயக்கம் பெற்று டிம்முக்கு 
உதவுகிறது. எனினும் இதில் படுகாயமுறும் டிம்மினை தாமதமாக வரும் டெல்சா குழு காப்பாற்றி ஜின் குவான் மூலம் சரி செய்கின்றனர்.....
ஸ்கை ஸ்காராப்பர்ஸ் கும்பல் அனைவரும் மடிய டெல்சா PLANET NIYRATA நோக்கி தனது குழுவுடன் விரைகிறாள்.....
டெல்சா UGC  தலைவர் நகோகி –யின் மகள் என ஜின் குவான் அறியும் வேளையில் UGC –யின் அங்கமான  PLANET GNISH க்கு சொந்தமான விண்கலம் இவர்களை வழிமறித்து கைது செய்கிறது....
PLANET GNISH இப்போது PLANET NIYRATA வுடன் விரோத மனப்பான்மை கொண்டிருப்பதோடு ரோபோக்களை அழிப்பதில் மும்முரமாய் இருக்கும் கிரக குழுக்களில் ஒன்று..................................
இதன் மன்னன் S’NOK III ட்ரில்லர் ரோபோவை ரோபோக்கள் தங்களுக்குள் சண்டையிட்டு அழியும் உருக்கு குழிக்கு அனுப்பி விட்டு ஜின் குவானை சித்திரவதை செய்ய துவங்குகிறான்.....
எல்லாரும் இப்படி டிம் மேல் ஒரு கண் வைக்க காரணம் உண்டு......
டிம் சிப்பில் உள்ள டிஜிட்டல் இம்ப்ரின்ட்டும் (அதாவது ரோபோ டிஎன்ஏ மாதிரியான சமாச்சாரம்) ஹார்வஸ்டர்ஸ் உடைய டிஜிட்டல் இம்ப்ரின்ட்டும் ஒரே மாதிரி இருப்பதுதான்......
சித்திரவதை தாங்காது ஜின் குவான் ஒரு உண்மையை வெளியிடுகிறார்..
15 வருடங்களுக்கு முன் தனது குரு புரபசர் சாலமன் உடன் UGC –யின் மற்றுமோர் அங்கமான  PLANET OSTRAKON-க்கு சென்று இருந்தபோது தனது குருவின் உழைப்பை திருடி ரோபோக்களை வடிவமைத்ததாகவும் அது தனது அறிவில் பிறந்தது அல்ல எனவும் ஒப்பு கொள்கிறார்.....
அப்போது அதிரடியாக அங்கு நுழையும் HARDWIRE என்னும் ரகசிய ரோபோ காப்பு குழு   எதிர்க்க முயல்வோரை கொன்று மன்னன் S’NOK III-ஐ துப்பாக்கி முனையில் வைக்கிறது.......
அங்கு ட்ரில்லர் ரோபோ உருக்கு குழியில் வீழ்வதிலிருந்து தப்பிக்க மற்ற சண்டை ரோபோக்களுடன் போராடி கொண்டிருக்கிறது...
இங்கு HARDWIRE தலைமை ரோபோ வான PSIUS தனது மகனை அழைக்க TIM 21  போல் தோற்றமுடைய TIM ZZ உள்ளே நுழைய .....

////////// பாகம் ஒன்று நிறைவு பெறுகிறது/////////////////////////////////////////////////////////


………….JEFF LEMIERE இதில் படம் வரையவில்லை.......
ARTIST.DUSTIN NGUYEN –யின் வாட்டர் கலர் ஓவியங்கள் கண் கவர் அழகு....

கதை சுருக்கம் படிக்கும்போதே STAR WARS, ARTIFICIAL INTELLIGENCE படங்கள் ஞாபகம் வருகிறதல்லவா?....ஆயினும் கதையின் விறுவிறுப்புக்கு பஞ்சமில்லை.........................
சுவாரஸ்யமான வாசிப்பு அனுபவம்................................................






Friday, 15 January 2016

SOUTHERN BASTARDS

SOUTHERN BASTARDS

AUTHOR…………… JASON AARON

ARTIST…………… JASON LATOUR

PUBLISHER………………..IMAGE

YEAR RELEASED………………………………OCTOBER 2014….

NOTHING NEW IN THIS SERIES …..CONCEPT WISE……..BUT WHO CARES???? AS LONG AS THE WRITER KNOWS HOW TO UNFOLD A STORY ALLURINGLY……

( THE FIRST PAGE ITSELF WILL MAKE YOU GRIN……..AARON IS BORN IN ALABAMA,LATOUR IS GROWN IN SOUTH OF AMERICA……NOW BOTH ARE LIVING FAR AWAY FROM SOUTH…….I HAD TO READ LOT ABOUT SOUTH ESPECIALLY ALABAMA ,ITS RELIGIOUS ATTITUDE,IT’S BEING SITUATED IN THE BIBLE BELT,  LAW ENFORCEMENTS,FOOTBALL AND MANY MORE………).

EARL TUBB COMES BACK TO HIS BIRTHPLACE AFTER 30 YEARS.TO SELL HIS HOME THERE…HE RAN AWAY FROM THE THE PLACE AS HE HATED IT THEN….CRAW COUNTY IN ALABAMA…..HIS FATHER HAD BEEN SHERIFF THEN ……..KNOWN FOR HIS VICIOUSNESS THEN .PERIOD……..

MEMORIES CAME BACK TO EARL …BITTER MEMORIES ABOUT HIS FATHER BERTRAND TUBB……

NOW IN HIS NEARLY SIXTIES EARL GOES TO LOCAL RESTAURANT BOSS BBQ TO EAT WHERE HE IS RECOGNISED BY OLD PAL DUSTY ….AFTER A CHAT DUSTY LEAVES…..

At HIS EXIT FROM THE RESTAURANT EARL NOTICED DUSTY IS BEING BASHED BY A LOCAL THUG ESAW GOINGS…..TO SAVE DUSTY EARL ATTACKS ESAW WITH A FRYING PAN AND BOTH EXIT FROM THE HOTEL……

LATER DUSTY EXPLAINS SOMEHOW HE EARNED THE WRATH OF LOCAL GANGLEADER CALLED COACH…..

ONE OF HIS GOONS ESAW  BY THE ORDER OF COACH TRIED TO KILL DUSTY THAT MORNING……………………..

MEANWHILE DARL IS BEFRIENDED BY A NEIGHBOUR  KID NAMED TAD……..

THAT NIGHT DUSTY IS MURDERED BY ESAW AND GANG……

EARL GOES TO LOCAL SHERIEFF ONLY TO LEARN SHERIEFF IS ANOTHER PUPPET OF 
THE THE COACH,THE GANGLEADER….

ENRAGED EARL THOUGH IN HIS SIXTIES A FORMER VIETNAM VETERAN WITH INTIMIDATING PHYSICAL FIGURE ASSAULTS ESAW……..

NEXT DAY ESAW VISITS WITH HIS GANG EARL’S HOUSE ONLY TO FIND TAD THE KID THERE…..

TAD IS BEATEN TO PULP TO SEND SIGNAL TO EARL…………………………………………………………

OUTRAGED EARL CONFRONTS THE COACH AFTER ANNIHILATING MOST OF HIS GANG…..AT THE HOTEL BOSS BBQ ……………………………………..

A MOST VIOLENT FIGHT ENSUES BETWEEN THEM………


THE COACH  FINALLY LEAVES ANGRILY WITH EARL  LEFT ON THE FLOOR UNCONSCIOUS……..

END OF VOULME 1…………………………………………….

காலம் காலமாக சொல்லப்பட்ட கதைதான்...........
எனினும் தெற்கின் மண் வாசனையோடு சொல்லப்பட்டு இருக்கிறது.....
BIBLE BELT-ல் அமைந்துள்ள பகுதி
 PROTESTANTS நிறைய உள்ள பகுதி........
 CHURCHGOERS அதிகம் உள்ள பகுதி........
HOME RULE, COUNTY LAWS, FEDERAL LAWS பற்றி படிக்க தூண்டிய கதை........
EARL-ன் கையில் இப்போது இருக்கும் முன்பு அவர் தந்தையின் கையில் இருந்த பெரிய மர தடியும் ஒரு கதாபாத்திரம் என்னும் அளவிற்கு சித்தரிக்கப்பட்டு இருக்கிறது......................................

கதைக்கு தேவையான அடர் வண்ணங்கள் நிரம்பிய அழகிய சித்திரங்கள்..

A WHOLESOME ENTERTAINMENT……………………………………..

















THE WAKE

The wake………………………………….

Author… scott snyder

Artist……..sean Murphy

Colorist……..matt Hollingsworth

Publisher……vertigo

Year released……..november 2014 (this one is compiled edition . there are two parts.each with 5 chapters. It seems single chapter issues were published by image comics)

Part..1

சமீபத்தில் படித்த காமிக்ஸ் புத்தகங்களில் இவ்வளவு விறுவிறுப்பான துவக்கம் இருந்ததாக தோன்றவில்லை.
லீ ஆர்ச்சருக்கு (lee archer is a cetologist…..அதாவது திமிங்கலம்,டால்பின் போன்ற கடல் வாழ் பாலூட்டிகளை பற்றி ஆராய்ச்சி செய்வோர்) உள்நாட்டு பாதுகாப்பு இலாகாவிலிருந்து அழைப்பு வருகிறது..
கடலுக்கு அடியிலிருந்து ஒரு விசித்திர சப்தம் வருவதாகவும் அது பற்றி ஆலோசனை தரவும் ( சப்தம் திமிங்கலத்தின் சப்தத்துடன் சற்றே ஒத்து இருப்பதால்) இதில் எக்ஸ்பர்ட்டான லீ க்கு வேண்டுகோள் வைக்கபடுகிறது.

ஆர்க்டிக் பகுதியில் கடலுக்கு அடியில் உள்ள ஒரு சட்டபூர்வமாக அங்கீகாரம் இல்லாத எண்ணெய் தயாரிப்பு மையத்துக்கு அழைத்து செல்லப்படும் லீ அங்கு dr .marin எனும் நாட்டுபுறவியல் நிபுணர், meeks எனும் கடலடி வேட்டை நிபுணன், dr. bob wainwright எனும் லீயின் முன்னாள் சக ஊழியர் என பலரை சந்திக்க முடிகிறது.........
விசித்திர சப்தம் எழுப்பிய கடல் கன்னி போன்ற தோற்றமுடைய ஒரு mercreature ஒன்றை அங்கு பிடித்து வைத்து இருக்கிறார்கள்.....
தனது கண்களில் இருந்து காட்சி உருவெளி பிம்பங்களை ஏற்படுத்தும் திரவத்தை பீய்ச்சி எதிரில் இருப்போரை குழப்பும் வல்லமை உள்ளது இது என பின்னர் தெரிய வருகிறது.......
மனிதர்கள் கட்டுபாட்டில் இருந்து தன்னை விடுவித்து கொள்ளும் mercreature அங்கு பெரிய நாசம் விளைவிக்கிறது.........
இதில் தப்பிக்க போராடும் லீ உள்ளிட்டோர் மையத்தின் வெளியே ஆயிரக்கணக்கான mer creatures மற்றும் பிரமாண்டமான ஒரு mer creature பார்த்து பிரமிக்கிறார்கள்......
மையத்தை தகர்த்தபின் கடலுக்கு மேல் சென்று பூமியில் நாசம் விளைவிப்பதுதான் அவற்றின் நோக்கம் என்பதை உணர்ந்து திகைக்கிறார்கள்.

End of part 1……..part 2 will continue soon…….
    
The wake ……part 2
காட்சி மாறுகிறது..................
இருநூறு வருடங்களுக்கு பிறகு.........
Mer creatures ஊழி பேரலைகளை ஏற்படுத்துவதில் வெற்றி கண்டுவிட்டன.( துருவ பனிபாறைகளை உருக்கி)
எங்கும் நீர் ......
நில பகுதிகள் வெகு குறைவு.............
பல கண்டங்கள் , நாடுகளின் எல்லைகள் வெகுவாக மாறி விட்டன.....
ஆஸ்திரேலியா போன்ற நாடுகள் இருந்த சுவடே தெரியவில்லை......
நீரடியில் கோடிகணக்கில் இப்போது mer creatures…………..

நன்னீர் நிலைகள் பெரும் பாதுகாப்புடன் இருக்க வேண்டிய சூழ்நிலை........
அரசாங்கங்கள் உண்டு,,....sort of territorial governments………….
இரண்டாம் பகுதியின் கதாநாயகி லீவர்ட்(leeward) –ஐ சந்திக்கிறோம்........

டேஷ் எனும் வளர்ப்பு டால்பினுடன்,,,,,,,,,,,,,,
mer creatures ஹன்டர் ஆக........
mer creatures –களை ட்ராப் செய்து அவற்றின் தலைகளை வெட்டி டேஷ் உதவியுடன் மோட்டரைஸ்டு கிளைடர் மூலம் தப்பிக்கும் லீவர்ட் HALLUCONOGENIC SUBSTANCE சுரக்கும் அவற்றின் கண்களை கள்ள மார்க்கெட்டில் விற்று சம்பாதிக்கும் ஒரு ப்ரீலேன்ஸ் அட்வென்ச்சரர்..............
இப்படியாக ஒரு ரேடியோவை சம்பாதிக்கும் லீவர்ட் பலரால் பேசப்படும் லாஸ்ட் வாய்ஸ் எனப்படும் ஒரு செய்தியை கேட்கமுடிகிறது....
(இது அரசாங்கத்தால் தடை செய்யப்பட்ட ஒன்று......)

(இது 2௦௦ ஆண்டுக்கு பிறகும் ட்ரான்ஸ்மிஷன் ஆகி கொண்டு இருக்கும் நமது லீ ஆர்ச்சரின் செய்திதான்)
லீவர்ட் வாழ்பகுதி கவர்னர் விவியன் ஆணைப்படி ஜெனரல் மார்லோ லீவர்ட் –ஐ கைது செய்து ஒரு பெருங்கப்பலில் துடுப்பு வலிக்கும் தண்டனை பெற செய்கிறார்......
பின்னர் கப்பலில் இருந்து தள்ளி விடப்படும் லீவர்ட் mer creature போன்ற வடிவமுடைய ஆர்கோ 3 எனும் நீர்மூழ்கி கப்பல் வாழ் மனிதர்களால் காப்பாற்ற படுகிறாள்......
அவுட் லையர்ஸ் எனப்படும் இவர்கள் mer creatures உடன் உடல் ரீதியான தொடர்புடையவர்கள் என கருதபடுகிறார்கள்........
டேஷ் உடல் மேல் பொருத்தியுள்ள கருவிகள் மூலம் லீ ஆர்ச்சரின் செய்தி தகவல் ஜனித்த இடத்தின் கோஆர்டினேட்ஸ்-ஐ கண்டுபிடிக்கும் லீவர்ட் அந்த
இடத்தை நோக்கி பயணிக்க ஆர்கோ 3 உள்ளுறை அவுட்லையர்சை இசைய செய்கிறாள்......

இடத்தை அடையும் இந்த குழுவை லீவர்ட்டின் உடலில் பொருத்தப்பட்டுள்ள லொகெட்டார் மூலம் பின் தொடரும் கவர்னர் விவியன் தலைமையில் தொடரும் ஒரு பெரும் கப்பல்படை,வான்படை குழுக்கள் தாக்க துவங்குகின்றன.......
இருநூறு ஆண்டுகளுக்கு முன்பு இருந்தார்போலவே இப்போதும் இருக்கும் லீ ஆர்ச்சர் உட்பட தேர்ந்தெடுக்கபட்ட சிலரை லீவர்ட்டால் சந்திக்கமுடிகிறது .
கடலின் அடியில் இருந்து லீவர்ட் உடன் ஒரு பெரும் விண்வெளி கப்பல் வெளி கிளம்ப அதனை ஏனைய குழுக்கள் தாக்குகின்றன.....
கவர்னர் விவியனை கொன்று ஜெனரல் மார்லோ லீவர்ட் தப்பி செல்ல அனுமதிக்கின்றார்..........
லீ ஆர்ச்சர் மூலம் லீவர்ட் -க்கு சில விளக்கங்கள் கிடைக்கின்றன......
mer creatures எப்படி ,ஏன் வந்தன?
அவை நண்பனா,விரோதியா?????????
நாம்தான் பூமிக்கு ALIENS-ஆ???????
மூல பதில் தத்துவார்த்தமாக ,படைப்பியல் சிந்தனை சார்ந்ததாக உள்ளது

(THE ROOT ANSWER IS BASED ON CREATION MYTHOLOGY AND PHILOSOPHY)

FOR AN AVERAGE READER THIS KIND OF END COULD BE SORT OF A LETDOWN)

WHY THE TITLE IS THE WAKE, WHY SUCH AN END AND LOT OF QUESTIONS ARE ANSWERED BY SCOTT SNYDER HIMSELF DURING AN EXIT INTERVIEW BY COMICS ALLIANCE PEOPLE ALONG WITH SEAN MURPHY
NICE INTERVIEW…….
மர்பியின் ஓவியங்கள் உயிரோட்டமுள்ளவை........எளிதில் மறக்க இயலா படைப்புகள்.....
கலரிங் செய்த ஹோலிங்க்ஸ்வொர்த்தையும் பாராட்டா வார்த்தைகள் இல்லை......
இவர்கள் இருவரின் இந்த புக்கில் படைப்பாற்றல் பற்றியே ஒரு தனி பதிவு எழுதலாம் எனினும் தட்’ஸ் BEYOND THE SCOPE OF THIS MINI REVIEW………

A WONDERFUL BOOK WITH MUCH WONDERFUL BEGINNING…….
ONCE AGAIN THANKS VISWA FOR RECOMMENDING THIS BOOK…………………………………………    



 



THIS ONE SUMMER

THIS ONE SUMMER…

AUTHOR…………………….JILLIAN TAMAKI

ARTIST…………………………MARIKO TAMAKI

PUBLISHER…….FIRST SECOND

YEAR    RELEASED…………2014

THIS BOOK IS ABOUT A DRAMA  ABOUT THE TRANSITION PHASE OF PREADOLECENCE GIRLHOOD TO ADOLESENCE.

SINCE HER VERY EARLY CHILDHOOD ROSE WITH HER PARENTS HAVE BEEN GOING TO AWAGO BEACH FOR EVERY SUMMER.

WITH HER FRIEND WINDY WHO ALSO COME TO THE SAME BEACH FOR EVERY SEASON ROSE USED TO ENJOY THE SUMMER.

THIS SUMMER ROSE’S PARENTS ARE QUARRELLING OVER THIS AND THAT(MOSTLY ABOUT THE SECOND CHILD)

ROSE’S MOTHER IS MOODY AND EASILY GETS AGITATED AND IT SEEMS SHE DOESN’T ENJOY THE STAY(THE REASON BEING {WHICH IS LATER REVEALED) THE UNDESIRED 1ST TRIMESTER ABORTION THAT ENSUED WHILE SHE WAS SWIMMING DURING THE PREVIOUS SEASON )

[THE PANEL THAT SHOWS THIS FLASHBACK INCIDENT MAY ATFIRST LOOK GRUESOME BUT IT REFLECTS THE MENTAL TRAUMA SUSTAINED BY ROSE’S MOTHER OVER THIS UNSAVOURY OCCURRENCE…..]

ROSE AND WINDY ARE EXPOSED TO NOTIONS OF PREMARITAL CONCEPTION AND RELATED CONSEQUENCES/COMPLICATIONS (THROUGH A LOCAL TEEN  GIRL  WHOSE ATTEMPTED SUICIDE IS PREVENTED BY ROSE).

 SO MANY LITTLE THINGS BUT IMPORTANT IN THE PERSPECTIVE  OF ADOLESCENTS ARE EXQUISITELY ELOBARATED.

THE HUMAN EMOTIONAL DRAMA UNFOLDING THROUGH THE EYES OF A PRE-TEEN GIRL IS PRODIGIOUSLY DESCRIBED

THE PURPLISHLY BLUISH DRWINGS OF  MARIKO TAMAKI( COUSIN OF THE AUTHOR JILLIAN)ARE WHOLLY ENJOYABLE.THE EXPRESSIONS OF ROSE’S ARE MASTERLY DEPICTED.

WINNER OF MANY AWARDS THIS BOOK BRINGS A DELIGHTFUL READING EXPERIENCE…………..




Thursday, 12 November 2015

WYTCHES

WYTCHES……….. VOULME 1

AUTHOR………………SCOTT SNYDER

ARTIST………….JOCK

COLORING…………….MATT HOLLINGWORTH

RELEASED………….. JUNE 2015

PUBLISHERS………………IMAGE

(THIS BOOK WAS MEANT TO BE READ ON OCTOBER 31ST AND FOLLOWED THE SUIT…..)

CHARLES ROOKS,HIS WIFE LUCY AND HIS DAUGHTER SAIL HAVE JUST SHIFTED TO A NEW LOCATION.REASON BEING IN THE PREVIOUS LOCATION A GIRL NAMED ANNIE DISAPPEARED IN THE PRESENCE OF SAIL .

ACCORDING TO SAIL SOMETHING FROM THE TREES TOOK HER AWAY THROUGH THE TRUNKS OF THE TREES……

TO GET HER RELEIVED FROM THIS UNSAVOURY HAPPENNIGS CHARLES AND LUCY MOVED INTO THIS NEW LOCALITY…..

 BUT SCARY THINGS ARE HAPPENING HERE TOO…..

ONEDAY  SAIL MISSES IN THE NEARBY WOODS…..

THEN CHARLES MEETS CLARA A BALDY OLD WOMAN AND SHE TELLS EVERYTHING…

IN UNDERGROUND LIVE  THINGS CALLED WYTCHES WHO HAVE UNUSUAL POWERS…. THEY UTILISE HUMAN WEAKNESS OF ‘’ SELFISH DESIRES’
…AND HUMAN S CAN GET ANYTHING FROM THEM AND IN RETURN THEY SHOULD OFFER A LIVING HUMAN MOST PREFERABLY KIDS TO THEM WHOM WILL BE TURNED INTO THEIRS MEAL….WYTCHES EAT ONLY SUCH PEOPLE…

..THIS IS CALLED PLEDGING..

CLARA IS ONE AMONG A GROUP CALLED IRONS WHO FIGHT SUCH WYTCHES WITH WYTCHES OWN TOOLS…..MAGICAL ONES….

AFTER THIS CLARA .OFFERING SOME OF HER MAGICAL TOOLS AND A LIST OF LOCAL PEOPLE WHO ACT AS TRAFFICKERS (SORT OF BROKERING AGENTS) TO THE WYTCHES DIES BY HANGING HERSELF…

(THE REASON BEING SHE’S IS INFECTED BY WYTCHEMITES , PARASITIC THINGS WHICH ARE GROWN IN THE WYTCHES’ SCALP HAIR AND THEY CAN  ALTER THE MINDS OF PEOPLE   IN FAVOUR OF THE WYTCHES)

CAN CHARLES FIGHT AND BRING BACK HIS DAUGHTER FROM THESE MONSTERS?

THAT’S THE CLIMAX OF THE VOULME 1…….

VERY SPOOKY STORY……MARVELLOUSLY TOLD……

STORY JOURNEYS THROUGH   PAST AND PRESENT FREQUENTLY…….

ART IS AWESOME THOUGH COLORING IS BIT EXTRAVAGANT……


FANTASTIC READING  ORDEAL……………………………………!!!!!!!!!











SAM ZABEL AND THE MAGIC PEN

Foreword…………………………………
பலவருடங்களாகவே பலரையும் போல வருடத்திற்கு ஒருமுறையாவது கல்கியின் பொன்னியின் செல்வனை ஐந்து பாகங்களையும் படித்து விடுவது வழக்கம்.....
வீராணம் ஏரிகரையிலிருந்து வந்தியதேவன் குதிரையினோடே கடம்பூர் மாளிகை, அரசலாறு,குடமுருட்டி,தஞ்சாவூர்.பழையாறை மற்றும்.இலங்கை, என பல மாளிகைகள், நிலவறைகள்.சுரங்க பாதைகள், சீறும் கடல்,புயல்.என் எல்லாவற்றிலும் வந்திய தேவனுடன் உடன் இருப்பது போன்று பிரமை ஏற்படும்.....
கதையின் தாக்கம் இல்லாதபொழுதுகளில் கல்கி இதனை மந்திர எழுது கோலால் எழுதியிருப்பாரோ என எண்ண தோன்றும்........
Chapter……………………….
                                     SAM ZABEL AND THE MAGIC PEN
Author / CREATOR…..DYLAN HORROCKS
PUBLISHERS…..FANTAGRAPHICS
RELEASED……DECEMBER..2014
SAM ZABEL  ஒரு கார்டூனிஸ்ட்/ கதாசிரியர்....ஏற்கனவே ஒரு அற்புதமான படைப்பை கொடுத்த நிலையில் சிலசமயம் எழுத்தாளர்களுக்கு ஏற்படும் எண்ணத்தடை காரணமாக அடுத்த படைப்பில் ஈடுபட இயலாமல் போகிறது..
மன அழுத்தம்,மனச்சோர்வு போன்றவைகளால் அவதியுறும் ஸாம் பிழைப்பை நடத்த வேண்டாவெறுப்பாக பிரபல பதிப்பகத்தின் சூப்பர் ஹீரோயின் கதை எழுதி காலம் தள்ளுகிறார்.....
( இந்த கதாபாத்திரம் டைலன் ஹோரோக்ஸ்- ன் நிஜ வாழ்வை பிரதிபலிப்பதால் இதனை ஒருமாதிரியான semi autobiography என கருதலாம்.)


கதையின் முதல் சேப்டரின் தலைப்பு.
இதைஉணர்த்துகிறது...ANHEDONIA…MEANING  inability to experience pleasure from activities usually found enjoyable, e.g. exercise, hobbies, music, sexual activities or social interactions
21- ம் நூற்றாண்டின் இலக்கியங்கள் என்ற கருத்தோடு நடக்கும் ஒரு கருத்தரங்கில் ஸாம் இளம்பெண்மணியானஅலைஸ் ப்ரவுன் என்ற வெப்காமிக் கார்டூனிஸ்டை சந்திக்க நேரிடுகிறது...
ஈவான் ரைஸ் என்ற காமிக்ஸ் எழுத்தாளரை பற்றி அலைஸ் சொல்ல அவரது ஒரு புத்தகமான the king of mars எனும் புத்தகத்தை ஒரு பழைய புத்தக கடையில் பெறும் ஸாம் அதை படித்து கொண்டிருக்கும்போது தும்ம.......
அந்த மாயாஜாலம் நிகழ்கிறது......
ஸாம் தான் படித்து கொண்டிருந்த செவ்வாய் கிரகத்துக்கே வந்துவிட்டு இருப்பதை உணர்கிறார்......அங்கு அப்போது தோன்றும் ஒரு பூதம் மாதிரியான உருவத்தை சமாளிக்கும் சாமின் முன்பு மிக்கி என்னும் ஓர் இளம்பெண் தோன்றி தனது மந்திர பூட்ஸ்களின் உதவியால் ஸாம்-ஐ தன்னை தொற்றிகொள்ள செய்து பறந்து செல்கிறாள்....
பிறகு மிக்கியின் மூலமாக ஸாம்-க்கு உண்மை தெரிய வருகிறது
 the king of mars எனும் அந்த புத்தகம் மந்திர பேனா ஒன்றால் எழுதப்பட்டது.அதன் பக்கங்களின் ஏதேனும்ஒன்றை அருகே வைத்து மூச்சு விட்டாலே குறிப்பிட்ட பக்கத்தில் நடக்கும் காலகட்டத்தில் கதைக்குள்ளே மனிதர் உள்ளே நுழைந்துவிடுவார்....
அவர் கார்டூனிஸ்ட் என அறியப்பட்டவுடன் செவ்வாய்கிரகவாசிகள் ஸாம்-க்கு மன்னர் என பட்டம் சூட்டி கிரீடம் அணிவிக்கின்றனர்...
இதை விரும்பாத ஸாம் மிக்கியின் மூலம் இந்த கதையை எழுதிய ஈவான் ரைசை சந்தித்து உண்மையை கூறுகிறனர்...
இந்த பேனா கிடைத்த கதையை ஈவான் சொல்கின்றார்.........
ஈவானை செவ்வாய்க்கு அனுப்பிவிட்டு புத்தகத்தின் gutterspace-மூலமாக வெளியேறும் ஸாம் பின்னர் queen of venus என்ற புத்தகத்தின் மூலம் வீனஸ் கிரகம் வரும்போது அங்கு அலைஸ் ராணியாக இருப்பதை பார்த்து வியப்படைகிறார்..
பின்னர் ஸாம், அலைஸ். மிக்கி மூவரும் மந்திர பேனாவால் எழுதப்பட்ட பல்வேறு காமிக்ஸ்களில் நுழைந்து பயணித்து பற்பல அனுபவம் பெறுகிறார்கள்.

கதையில் வில்லனும் உண்டு.........
அந்த மந்திரபேனா சாமுக்கு கிடைக்கிறது....ஆனால் அதை அவர் அலைசிடம் கொடுத்து விடுகிறார்...
படிக்க அற்புதமான கதை.......
பின்னுரை....உண்மையில் ஒரு வாசகனை கதையினுள்ளே ஜீவித்துஇருக்க செய்ய மந்திரபேனா ஏதும் அவசியமில்லை.என ஸாம் உணர்ந்ததாகவே. தோன்றுகிறது
கல்கியின் எழுத்துக்கள் இதனையே உணர்த்துகின்றன......


இந்த புத்தகத்தை பரிந்துரைத்த விஸ்வாவிற்கு நன்றிகள் பல.....!!!!!!!!!!