Tuesday, 1 September 2015

RAT QUEENS

RAT QUEENS….SAAS AND SORCERY…..

VOULME 1 (1-5 CHAPTERS)

AUTHOR…..KURTIS .J.WIEBE

ARTIST….ROC UPCHURCH

COVER ART…ED BRISSON

AT THE MEDIVAL TOWN PALISADE( MAYOR…KANE, CHIEF OF TOWN GUARDS …SAWYER SILVER) THERE ARE MANY MERCENARY GROUPS(ALL LEGITIMATE).THEY KILL FOR PROFITS AND MONETARY REWARDS.LEGITIMATE IN THE SENSE THEY KILL PEOPLE/ MONSTERS WHO TEND TO HARM THE TOWN OF PALISADE/IT’S RESIDENTS.

OUR ‘’ RAT QUEENS’’ ARE ONE AMONG THESE GROUPS.

HANNAH…TEAM LEADER (CAN DO MAGIC)

VIOLET

DEE

BETTY

THESE GROUPS ARE DISLIKED BY MANY OF PALISADE RESIDENTS DESPITE THEIRS” PROTECTION ROLE AS THESE GROUP MEMBERS ARE ROWDIES .

ONE DAY A MISSION IS BEING GIVEN TO RQ…TO ERADICATE TROUBLESOME GOBLINS LIVING NEARBY HILL AREA.ON THEIR WAY THEY ENCOUNTER AN ASSASSIN WHO TRIES TO MURDER THEM.

RQ   REALISE THE QUEST FOR GOBLIN SLAYING IS A TRAP. AS THEY FIGHT THE SKILLED ASSASSIN ,HE’S KILLED BY A PASSING TROLL.

THE TROLL IS EVENTUALLY KILLED BY THE RQ. IN THIS ADVENTURE HANNAH IS SEVERELY INJURED BUT HEALED BY DEE WITH HER UNIQUE SKILLS IN SUCH THINGS.

ON THEIR WAY BACK( THERE ARE NO GOBLINS)THEY MEET ANOTHER MERCENRAY GROUP (OR WHAT’S LEFT OF IT) CALLED ‘’ THE PEACHES’’ WHO TOO WERE ATTACKED  BY ANOTHER ASSASSIN WHO’S KILLED BY BRAGA A TEAM MEMBER OF THE PEACHES GROUP.

DEE HELPS BRAGA TO RECOVER FROM HER MORTAL INJURIES SHE SUSTAINED.
THEY RETURN TO PALISADE TO FIND MOST OF THE MERCENARY GROUPS ,EACH GIVEN A SEPARATE TASK, ARE WIPED OUT.

RQ DECIDE TO GET TO BOTTOM OF THIS CONSPIRACY.

KANE THE MAYOR, SAWYER THE CHIEF OF GUARDS , THE PRIME SUSPECTS ARE RULED OUT

THEY FIND A FINANCIAL INSTITUTION CALLED  MERCHANT GUILD IS  THE ONE THAT’S BEHIND THIS MYSTERY.

MEAN WHILE THE GIRLFRIEND OF THE TROLL (THE ONE KILLED BY RQ)COMES TO PALISADE TO AVENGE WITH AN ARMY OF BARBARIANS. A BATTLE ENSUES.
THE FOUR  DAVES ANOTHER MERCENARY GROUP COME TO THE AID OF RQ.
THE GIRLFRIEND TROLL IS KILLED AT THE END .VIOLET WHO’S INJURED RECUPARATES LATER.

RQ’S FURTHER INVESTIGATIONS LEAD TO   ‘’BERNADETTE’’ AN OLD LADY OF PALISADE WHO INTURN IS THE PUPPET OF A MAN CALLED ‘’GERRIG’’….GERRIG WANTS TO REPAY SAWYER WITH VENGEANCE AS HIS WIFE IS DIED AT THE HANDS OF SAWYER…

END OF VOULME 1…..
…………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………..
THE CONVERSATIONS ARE FUNNY…BLOOD AND GORE ARE PART OF THE STORY.
.
THE ART IS GORGEOUSLY DRAWN..


ENTERTAINING…!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!! 




















டெக்ஸ் வில்லர்














டெக்ஸ் வில்லர்.......................!!!!!!!!!!!

பிறப்பு.........1840(தோராயமாக)
தந்தை.......கென்னத் வில்லர்
தாய்.......மே வில்லர்(mae willer)(டெக்ஸ் விவரம் அறியும்முன் இறந்து விடுகிறார்)
மூத்த சகோதரன்.....ஸாம் வில்லர்
பிறப்பிடம்......டெக்சாஸ் மாகாணத்தில் பிட்டர் ஸ்பிரிங்ஸ் கிராமம்.

பகுதி...ஒன்று.............
.......கென்னத் வில்லர் தனது மகன்கள் மற்றும் gunny bill எனும் வயதான உதவியாளர் துணையுடன் ஒரு சிறு பண்ணையை நடத்தி வருகிறார்... 

gunny bill பிறிதொரு தந்தையை போல் துப்பாக்கியை கையாள ,குறி தவறாது சுட டெக்ஸ்க்கு கற்று தருகிறார்......

டெக்ஸ்க்கு 15வயது இருக்கையில் போக்கிரி கும்பல் ஒன்று பண்ணையை சூறையாடி கென்னத் வில்லரை கொன்று தப்பி செல்கிறது...

... gunny bill –ஐ உடன் அழைத்து கொண்டு மெக்சிகோ வரை அந்த கும்பலை விரட்டி செல்லும் டெக்ஸ் அனைவரையும் கொன்று பழி தீர்க்கிறார்.

மீண்டும் டெக்சாஸ் திரும்பும் வழியில் Rurales எனப்படும் மெக்ஸிக எல்லை ரோந்து காவல் படையை இருவரும் எதிர்கொள்கின்றனர். 

பெரும்பாலான எதிரிகள் கொல்லப்பட்டு சிலர் தப்பிசெல்கின்றனர்.இந்த சண்டையில் gunny bill கொல்லபடுகிறார்......

அவர்உடலை தன் பண்ணைக்குஎடுத்து வந்து புதைத்தபின் தனது பங்குகளை சகோதரன் ஸாமிடம் ஒப்படைத்து ஊரை விட்டு கிளம்புகிறார் டெக்ஸ்....
---------------------------------------------------------------------------------------------------------------------------------------------
பகுதி இரண்டு.........
அபிலீன் நகரம் வரும் டெக்ஸ் அங்கு கார்லிஸ் சகோதரரர்களிடம் வேலையில் சேர்கிறார்...rodeo என்ற ஊர் ஊராக சென்று குதிரை,காளைகள் அடக்கும் சாகசங்கள்,சுருக்கு கயிறு வீசும் ஜால வித்தை (லாசோ) போன்ற கேளிக்கையூட்டும் நிகழ்ச்சிகளை நடத்துபவர்கள் கார்லிஸ் & கோ.

அற்புதமான ரோடியோ வீரராக உருமாறுகிறார் டெக்ஸ்.....இந்த காலகட்டத்தில்தான் டைனமைட் என்ற ஆக்ரோஷமான குதிரையை அடக்குகிறார். பின்னர் நெடுநாள் டைனமைட் அவரின்உற்ற நண்பனாக விளங்குகிறது.......

இரண்டு வருடங்கள் இவ்வாறு கழிந்தபின் சகோதரன் ஸாம் கொல்லப்பட்ட சேதி டெக்சை வந்தடைகிறது.

சாமின் பண்ணையை அடையும்பொருட்டு உள்ளூர் ஷெரீப் காலின் என்ற நபரின் உதவியோடு டாம் ரெபோ என்ற கால்நடை பண்ணை முதலாளி செய்த கொலை எனதெரிய வருகிறது.....

வெகுண்டுஎழும் டெக்ஸ் டாம்ரெபோ மற்றும் அவரின் கைகூலிகளை ஒட்டுமொத்தமாக தனியாளாக வேரருக்கிறார்.

ஆனால் தப்பிவிடும் ஷெரீப் காலின் டெக்ஸ் மேல் பல இல்லாதபழிகளை சுமத்தி சட்டத்தினால்தேடப்படும் ஓர் குற்றவாளி என்ற நிலையை உருவாக்குகிறார்.....



பகுதி 3
மேற்கூறிய சம்பவங்களுக்கு பிறகு ராட் ஸ்டேன்டன்,டிக் எனும் நண்பர்கள்உடன் இணைந்து கால்நடை விற்கும் குழுவாக டெக்ஸ் செயல்படுகிறார்...

அமெரிக்க உள்நாட்டு போரில் தெற்கத்தியர்களுடன் சேர்ந்து போரிட விரும்பும் ராட் –ன் கருத்தை மறுக்கிறார் டெக்ஸ்....

மனிதர்கள் அனைவரும் சமம்......அடிமை முறையை தான் விரும்பவில்லை என வெளிப்படையாகவே கூறுகிறார்....

ராட் தன்வழியில் செல்லவிரும்பி தனதுபங்கு மந்தைகளை பெற்று பிரிந்து செல்கிறார்.......

வடக்கு நோக்கிசெல்லும் டெக்ஸ்,டிக் வழியில்குறுக்கிடும் கான்பெடரேட் சிறு படைபிரிவிலிருந்து தங்கள் மந்தையை காப்பாற்றி அதை விற்று பணத்துடன் திரும்புகின்றனர்....

செயின்ட் லூயிஸ் நகர் செல்லும் வழியில் கெண்டகி மூன்றாவது குதிரை படையை சார்ந்த லெப்டினன்ட் க்லைன்டர் என்னும் ஸ்க்வுட்டை உயிர் அபாயத்திலிருந்து காக்கின்றனர்.
பின்னர் போரில் காயமுறும் க்லைண்டர் இவர்களிடம் முக்கிய செய்திஒன்றை கேப்டன் டார்க் இடம் கொடுக்கசொல்லி அனுப்புகிறார்...
கௌபாய்களை சந்திக்கும் டார்க் இவர்களை ஸ்கவுட்டுகளாக சேரும்படி வேண்டுகிறார்...
சில நிபந்தனைகளுடன் இருவரும் ஒப்புகொள்கின்றனர்....
சில காலம் கழித்து சிலோ என்ற இடத்தில் யூனியன் மற்றும்கான்பெடரேட் இருவருக்கும் நடக்கும் கோரயுத்தத்தில் குற்றுயுராக களத்தில் கிடக்கும் நண்பன் ராட்ஸ்டேன்டன்-ஐ சந்திக்க நேருகிறது.
மரண தறுவாயில் நண்பனின் இனிய வார்த்தைகள் டெக்ஸ்-ன் மனத்தை சஞ்சலம் செய்கிறது....அருமையான நண்பர்களை பிரிக்கும் அர்த்தமில்லாத போரை அவர்மனம்வெறுக்கிறது...
இதன்பின் நேரடியாக போரில்ஈடுபடாது போரில் காயமுற்றோர்க்கு உதவுவது,உணவு வழங்கும் பிரிவு ஆகிய பகுதிகளில் பணி புரிகின்றார்..
டெக்ஸ் தாய்மண்ணான டெக்சாஸ் கான்பெடரேட் பக்கம் சார்ந்தது என்பது குறிப்பிட தகுந்தது




பகுதி 4

போர் முனை பகுதிகளில் பணியாற்றினாலும் இன்னமும் தேடப்படும் ஒரு குற்றவாளியாகவே கருதபடுகிறார் டெக்ஸ்....

அவரது அநியாயம் நடந்தால் தட்டி கேட்கும் மனப்பான்மை,துப்பாக்கியை மின்னல் வேகத்தில் கையாளும்திறன் அவரை பிரபலப்படுத்துகிறது

இதை கேள்விப்படும் மேற்கு பிராந்தியத்தின் சிறப்பு அரசாங்க உயர்அதிகாரியான மேஜர் ஹெர்பர்ட் மார்ஷல் அவருக்கு பொது மன்னிப்பு வழங்கி மேற்கு பகுதியின் ரேஞ்சர் பிரிவில் சேர்த்து விடுகிறார்...

இப்படி ரேஞ்சர் பணியில் சேரும் டெக்ஸ் அடிக்கடி கிட் கார்சனுடன் இணைந்து வேலைசெய்ய நேரிடுகிறது....இருவரும் உயிர் நண்பர்கள் ஆகின்றனர்...

அமெரிக்க ராணுவ இதர விஷயங்களை மெக்ஸிகோவுக்கு உளவு சொல்லும் ஒரு கும்பலை பிடிக்க பணிக்கபடுகிறார் டெக்ஸ்....

இப்போதுதான் தனது முக்கியஎதிரியான ஸ்டீவ் மெபிஸ்டோ டிகார்ட்-ஐ சந்திக்கிறார் டெக்ஸ்...

மெபிஸ்டோ (சாதாரண மேஜிக் நிபுணன் ஆகஇருக்கும் மெபிஸ்டோ பின்னாளில் ஆவியுலக பேச்சாளன், மாயா உருவெளி தோற்றங்களை ஏற்படுத்தும் திறமையாளி, மிஸ்டிக் பவர் ஆசாமி எனபல அவதாரங்கள் எடுக்கிறார்) மற்றும் அவரது சகோதரி லில்லி ஆகிய இருவரும்தான் உளவு கடத்துவதில் சூத்திரதாரிகள் என்று டெக்ஸ் கண்டு பிடிக்கும் சமயம் அமெரிக்க லெப்டினன்ட் ஒருவரை கொலைசெய்து அந்த பழியை டெக்ஸ் மேல் விழும்வண்ணம் சூழ்ச்சிவலை செய்து தப்புகின்றனர் மெபிஸ்டோவும் லில்லியும்....

கார்சன்உதவியுடன் சிறையிலிருந்து தப்பும் டெக்ஸ் மெபிஸ்டோ ஜோடியை தேடி மெக்ஸிகோ செல்கிறார்..

அங்கு ஒரு பெரியஎஸ்டேட் வாங்கி செட்டில் ஆகிஉள்ளனர் மெபிஸ்டோ&கோ

மெக்சிகோவின் ஊழல் மலிந்த  அரசாங்கத்தை எதிர்த்து போராடும் montales எனும் போராளியின் துணையுடன் மெபிஸ்டோ &லில்லியை கைது செய்து தன் மேல் உள்ள களங்கத்தை துடைக்கிறார் டெக்ஸ்

 montales பின்னாளில் சிகுகுவாவின் கவர்னர், மெக்ஸிகோ   வைஸ்பிரசிடென்ட்  என     உயர்கிறார்



பகுதி 5
அமெரிக்கா திரும்பும் டெக்ஸ்-க்கு மறுபடியும் ரேஞ்சர் பணி வழங்கபடுகிறது..

நவஜோ பழங்குடியினருக்கு ஆயுதங்கள் கடத்தும் கும்பலை பிடிக்க ஆணை வருகிறது...

இதுபற்றிய புலனாய்வில் டெக்ஸ் ஈடுபட்டிருக்கும்போது நவஜோ தலைவர் ரெட்ஆரோவால் சிறை பிடிக்கபடுகிறார் டெக்ஸ்..

நவஜோக்கள் அவரைகொல்ல எத்தனிக்கும்போது ரெட்ஆரோவின் மகள் லிலித் டெக்ஸ்-ஐ மணம் செய்து கொள்ள விரும்புவதால் காப்பாற்ற படுகிறார்..

லிலித்-ன் முடிவுக்கு காரணம் ரேஞ்சர் வில்லையை அணிந்துள்ள டெக்ஸ் கொல்லபட்டால் அமெரிக்க ராணுவம் அதை காரணமாக வைத்து தொடுக்கும் போரால் இருபுறமும் ஏற்படபோகும் ரத்தக்களரியை தடுப்பதற்கே.........

நவஜோ பெண்ணை மணந்து இருப்பதால் வெள்ளையர் இடையே ஆரம்பத்தில் குழப்பம் ஏற்படாதிருக்கவும்,ஒவ்வொருமுறையும் ஹெர்பர்ட் மார்ஷலிடம் அனுமதி பெற்று செயலாற்றுவதை தவிர்க்கவும் கறுப்பு உடை அணிந்து  அவர் பணியாற்றுவதை கண்ட’நவஜோக்கள் அவருக்குஇட்டபெயர்தான்

Aquilla della notte……….   இரவு கழுகு...

ரெட்ஆரோவின் மூலம் ஆயுதகடத்தலில் ஈடுபடுவோர் பிரெட் பிரன்னன், ஜான் டெல்லர்  என்றஇருவர் எனஅறிந்து கொள்ளும் டெக்ஸ் அந்த கும்பலையே கார்சன் உதவியுடன் கைதுசெய்து சிறையில் தள்ளுகிறார்..

திருமண வாழ்க்கையின் பொறுப்புகள் டெக்ஸ்-ஐ ரேஞ்சர் பதவியிலிருந்து
ராஜினாமா செய்ய வைக்கின்றன.......


பகுதி 6
புரிதல் ஏதுமின்றி சூழ்நிலை வசதி கருதி மணம் செய்த டெக்ஸ்- லிலித் காலப்போக்கில் மனமொத்த தம்பதி ஆகின்றனர்..

இரண்டு வருடங்களில் கிட் பிறக்கிறான்..

( கிட் கார்சன் காட்பாதர் என்பதால் அந்த பெயர்)

சின்னகழுகு என நவஜோக்கள் அழைக்கின்றனர்.....

 இந்த இனிமையான வாழ்வு நீடிக்கவில்லை......

ஊழல் அரசியல்வாதிகள் சிலர்உதவியோடு சிறையிலிருந்து வெளியேறும் பிரெட் பிரன்னன், ஜான் டெல்லர்  இருவரும் மறுபடியும் ஆயுத கடத்தலில் ஈடுபட ஏதுவாக ராணுவ கிடங்குகளில் இருந்து திருடப்பட்ட பெரியம்மை நச்சு கிருமிகள் அடங்கிய போர்வைகளை நவஜோ பகுதியில் புழங்க விடுகின்றனர்...

இதனால் பல நவஜோ கிராமங்களே அழிகின்றன.

இதில் லிலித்-ம்அடக்கம் ....

சம்பவம் நடக்கும்போது கிட்,டெக்ஸ் வேறு பிராந்தியம் சென்றுஇருப்பதால் தப்புகின்றனர்..

மனைவி இறந்து சிலமணி நேரம் கழித்து அங்கு வரும் டெக்ஸ் அவரது கல்லறை அருகே அதற்கு காரணமானவர்களை அழிக்க சபதம் பூணுகிறார்.
 சில மாதங்களில் ஜான் டெல்லர் கொல்லபடுகிறார்...

டெக்ஸ்-ஆல் எப்போது கொல்லபடுவோமோ என்ற அச்சத்தில் வாழும் பிரெட் ப்ரன்னன் பைத்தியம்பிடிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டு பல வருடங்கள் கழித்து டெக்சால் கொல்லபடுகிறார்....


பகுதி 7

தன் மகனை வளர்க்க நவஜோ பிராந்தியம் செல்லும் டெக்ஸ்க்கு டைகர் ஜாக் எனும் வாலிபன் உற்ற துணையாக மாறுகிறான்...
ஏற்கனவே இருவரும் சந்தித்துள்ளனர்.

 முன்னொரு சமயம் தனது மனைவியை கொன்ற யுடேஸ் பிரிவினரை டைகர்ஜாக் பழி வாங்க செல்லும்போது டெக்ஸ் அதற்கு உதவி செய்துஇருக்கிறார்...

இருவரும் ரத்த சம்பந்த சகோதரர் போல் மாறுகின்றனர்..........

லிலித் மரணத்திற்கு பிறகு ரெட்ஆரோ டெக்ஸ்-ஐ வளர்ப்பு மகனாக தத்தெடுப்பதால் நவஜோ இன தலைவனாக உருவெடுக்கிறார்......

மற்ற பழங்குடியின தலைவர்களுடன் நட்பு பூணுகிறார்....

அபாச்சே தலைவர் கோசைஸ்-யுடன் சகோதர நட்பு ஏற்படிகிறது...

நவஜோ தலைவராய் இருப்பதிலும் பிரச்சினைகள்இல்லாமல் இல்லை..

லிலித்-ன் ஒன்று விட்ட சகோதரன் சாகுவா தன் தாய் ஜெண்டாவின் தூண்டுதலால் வெள்ளையர் ஒருவர் நவஜோ தலைவனா என போர்க்கோலம் பூணுகிறான்.

கிட் வில்லரை சாகுவா தரப்பு கடத்தி செல்வதால் பெரும் யுத்தம் ஏற்படும் சூழ்நிலை தோன்றுகிறது...

எதிர்பாராதவிதமாக தாய்ஜெண்டா மரணமடைவதால் அதிர்ச்சியுறும் சாகுவா சமாதானத்திற்கு வருகிறான்....

தலைமை பொறுப்பை விட்டு தர  டெக்ஸ் முன்வந்தும் மறுக்கிறான்....
பின்னர் பெரியவர்கள் ஏற்பாட்டின்படி மலைபகுதிக்கு சாகுவா, சமவெளி பகுதியில் டெக்ஸ் தலைவர் என முடிவாகிறது.


இதற்கு பின் வருவது அனைவரும் அறிந்ததே



...



DEADLY CLASS

………………….DEADLY CLASS……………………………VOULME 1

 ////////1987 REAGAN YOUTH//////////////////

AUTHOR………………………RICK REMENDER

ARTIST………………………WES CRAIG

PUBLISHER……………….IMAGE

RELEASED………………….JULY 2014

(THE REVIEW IS BEING WRITTEN ON THE BASIS OF CHRONOLOGY OF EVENTS BUT THE STORY IS BEING TOLD OTHERWISE.)
1987 ....
ஸான் பிரான்சிஸ்கோ....மன நிலை பாதிக்கப்பட்டவர்களால் தாய், தந்தை கொல்லப்பட சன்செட் சிறுவர் ஹோமில் சேர்க்க படுகிறான் மார்கஸ் லோபஸ்.

ஹோமின் சூழலில் வெறுப்புற்று ஆணி வெடிகுண்டு வைத்து அதை தகர்த்து சேதமடைய செய்து அங்கிருந்து தப்புகிறான் மார்கஸ்.

இந்த வெடிகுண்டு சம்பவத்தால் கடந்த இரண்டு வருடங்களாக போலிசால் தேடப்படும் குற்றவாளியாக இருக்கிறான் மார்கஸ்.

இதே சம்பவத்தால் ஏதோவொரு வகையில் பாதிக்கப்பட்ட “கோர முகம்” உடைய ஒருவனும் மார்கசை பழி வாங்க அவனை தேடி கொண்டு இருக்கிறான்.

ஸான் பிரான்சிஸ்கோ வீதிகளில் நடைபாதைவாசியாக காலம் கழித்து வரும் மார்கசுக்கு வாழ்வே வெறுப்பாக இருக்கிறது..

அவனுக்கும் ஓர் லட்சியம் உண்டு...அதுவே அவனை இவ்வுலகில் வாழ வைக்கிறது....
அமெரிக்க ஜனாதிபதி ரொனால்ட் ரீகனை கொல்வதுதான் அது.....

பெற்றோர் உடன் அமைதியான வாழ்வை சீர்குலைந்து போக காரணமானவர்....ரீகன்

மனநல காப்பகங்கள், மருத்துவ இல்லங்கள் ஆகியவற்றுக்கான நிதியுதவியை அவர் நிறுத்தியதால்தானே மனநல நிலையங்கள் உள்ளே இருக்க வேண்டிய பைத்தியங்கள் வெளியே விடப்பட்டு அவர்களால் தன் தாய், தந்தை கொல்லப்பட்டனர்....

அவர்கள் சாவுக்கு காரணமான ரீகன் கொல்லப்பட வேண்டிய ஆசாமி...

இந்த எண்ணம் மார்கஸ் மனதில் ஆழ பதிந்து இருந்தது.........

ஓர் நாள் இரவு சக நடைபாதைவாசி ஒருவன் மார்கசின் ஷூக்களை திருட முற்படுகையில் மார்கஸ் அவன் மேல் கோபம் கொள்கிறான். அவன் கால்களில் உள்ள பனி காரணமாக வந்த புண்களை பார்த்து பரிதாபம் கொண்டு தானாகவே ஷூக்களை கொடுத்து அனுப்புகிறான்..
இந்த களேபரத்தில் போலிசின் கண்களில் பட ஒருபோலிஸ் படையே அவனை துரத்துகிறது.


இறுதியில் ஒரு முட்டுசந்தில் மாட்டிகொள்ளும்அவனை ஒரு போலிஸ் அதிகாரி கொல்ல முயல அதிகாரியை பட்டாகத்தியால் குத்திகொன்று மார்கசை காப்பாற்றுகிறாள் சாயா என்ற இளம்பெண்...
..

மார்கசை தனது குரு மாஸ்டர் லின்-னிடம் அழைத்து செல்கிறாள் சாயா.

பின்னர் லின் விருப்பப்படி பாதி மனதாக KING’S DOMINION ACADAMY OF THE DEADLY ARTS என்ற பள்ளியில் சேருகிறான் மார்கஸ்.

இது தொழில்முறை கொலையாளிகளை உருவாக்கும், அவர்களுக்கு வேண்டிய பயிற்சிகளை கொடுக்கும் பள்ளி.

இந்த அகாடமியில் பல குழுக்கள் உண்டு. முக்கியமானவர்கள்

சி.ஐ.ஏ,  எப்.பி.ஐ இவர்களால் அனுப்பப்பட்டவர்கள்

தென் அமெரிக்க, லாஸ் ஏஞ்சல்ஸ் பகுதியினர்

போதைபொருள் கடத்துவோரின் வாரிசுகள்

ஜப்பானிய குழுவினர்(சாயா இந்த குழுதான்)

தென் அமெரிக்க குழுவின் ஹெட் சிக்கோ. மரியா இவனது கேர்ள்பிரென்ட்.மரியாவுக்கு மார்கசின் வசீகர தோற்றம் பிடித்து போகிறது.

மார்கசுக்கு தன்னை காப்பாற்றிய சாயாவின் மேல் க்ரஷ்.


மார்கசுக்கும், வில்லி என்றொரு மாணவனுக்கும் ஒரு கொலை பயிற்சி அசைன்மென்ட் கொடுக்கபடுகிறது.

டார்கெட்<<<<<< மார்கஸமிடமிருந்து ஷூக்களை திருட முயன்ற நடைபாதைவாசி.

பரிதாபமான அந்த ஆசாமியை கொல்ல மனம் வராது இருவரும் அந்தஆளை தப்பவிடுகின்றனர்..
ஏற்கனவே நடைபாதையில் தங்கியிருக்கும்போது அறிமுகமான ரோரி என்ற ஒரு ஆளுடன் போதைபொருள் உட்கொள்ளும் மார்கஸ், வில்லியிடம்  வியட்நாமில் ஒருகிராமத்தையே கொளுத்தியதாக அந்த முன்னாள் ராணுவ நபர் போதையில் உளற அப்பாவிகளை கொன்றதாக கோபமுறும் மார்கஸ் அந்த ஆளை கொன்று விடுகிறான்.

அகாடமி திரும்பும் மார்கஸ், வில்லி ஜோடியை லின்- ன் கோபம் வரவேற்கிறது. கட்டளைக்கு கீழ்படியாமை.தவறான.’’ இலக்கினை’’ கொன்றது ஆகிய காரணங்களினால் மார்க்ஸ்க்கு பதினைந்து நாள் தனிமைஇருட்டுசிறை வாசம் தண்டனையாக விதிக்க படுகிறது.

சில நாட்கள் கழித்து மரியா ரகசிய நிலவரை வழியாக மார்கஸை மீட்டு வெளி கொணருகிறாள்.
மரியா, சிக்கோ, சாயா,பில்லி, வில்லி (இவர்களுடன் காரில்  மார்கஸ்) haight ashbury என்னும் பகுதியை நோக்கி விரைகிறார்கள்.

Hippie hell என்று அழைக்கப்படும் இப்பகுதி ஹிப்பிக்கள் சங்கமிக்கும் இடம்.

பயணத்தின் நோக்கம் பில்லியின் விருப்பப்படி அவனது தந்தையை கொல்வது.....

(பில்லியின் தந்தை ஒரு முன்னாள் போலிஸ் அதிகாரி.போதை கடத்தல் தொழிலில் அதிக லாபம் வருவதை கண்டு அதில் முழு மூச்சாய் இறங்கி விட்டவர்.தனக்கு சிறிதும் விருப்பம் இல்லாத அகாடமியில் தன்னை சேர்த்து விட்டதாலும்,தன்னைஅவர் சிறிதும் நேசிப்பது இல்லை என பில்லி கருதுவதாலும் பில்லி அவரை கொலை செய்ய துணிகிறான்.)

(பயணத்தின்போது அவர்கள் காரை ஓவர்டேக் செய்வது ஹெல்மெட் அணிந்த”கோர முகத்தான்” என தெரிகிறது)

அதீத போதை பொருளை hippie hell-ல் உட்கொள்ளும் மார்கஸ் பிற மாணவர்களுடன் ஒரு ஹோட்டலில் தங்குகிறான்.மற்றவர்கள் வெவ்வேறு காரணங்களால் வெளி செல்ல பில்லி
அதே ஹோட்டலில் தங்கியுள்ள தனது தந்தையின் கழுத்தை நெறிப்பதை பார்த்து திடுக்கிடுகிறான் மார்கஸ்.பில்லி உதவிக்கு அழைக்கவே வெயிட் லிப்ட் பாரினால் அவரை தாக்கி கொன்று விடுகிறான் மார்கஸ்.

ரத்த கறையை கழுவ பில்லி செல்ல குழப்பமான எண்ணங்களுடன் வரும் மார்கஸை அரைகுறை ஆடை அணிந்த மரியா தன்அறையின் உள்ளே இழுக்கிறாள்.தடுமாறும் மார்கசையும் அலங்கோலமாக உள்ள மரியாவையும் அப்போது அறையின் உள்நுழையும் சிக்கோ பார்த்து வெறிகொள்கிறான்.

மார்கஸ் ஜன்னல் வழியே தப்ப தடுக்க முயலும் மரியாவை தள்ளி மார்கஸை துரத்துகிறான் சிக்கோ.

ஓரிடத்தில் சிக்கிகொள்ளும் மார்கசை உடல்வலுமிக்க சிக்கோ கடுமையாக தாக்கி காயப்படுத்துகிறான்.

அங்கு வந்து இதை தடுக்க முயலும் நான்கு போலிஸ் அதிகாரிகளை சுட்டுகொன்றுவிடுகிறான்.

இந்த களேபரத்தில் தவழ்ந்து தப்பி செல்ல முயலும் மார்கசை மறுபடியும் சிக்கோ தாக்க முற்பட அங்கு வந்து சேரும் வில்லி,பில்லி,மரியா,சாயா அதை தடுக்க முற்படுகிறார்கள்.

பல்வேறு குழப்பங்களிடையே மரியாவால் சிக்கோ கொல்லபடுகிறான்.

அப்போது அங்கு வரும் கோர முகத்தான் படுகாயமுற்றுள்ள மார்கஸை தான்தான் மார்கசின் ஜென்ம விரோதி எனவும் தன்னால் சித்திரவதைப்பட்டு சாக உடலை தேற்றிவைத்து கொள்ளும்படியும் எச்சரித்து சிக்கோ உடலுடன் செல்கிறான்.(தனதுபூனைக்கு உணவாக கொடுக்க)

பல்வேறு எண்ணங்களுடன் மரியா குழு அகாடமி நோக்கி திரும்பி செல்கிறது

//////////////////////////////////////////////////////முதல் பகுதி நிறைவு//////////////////////////////////////////////////////////////////////////////////////










பின் இணைப்பு:
1.தலைப்பில் உள்ளபடியால் ரொனால்ட் ரீகன் பற்றி படிக்க வேண்டியதாயிற்று.
ஜிம்மி கார்ட்டரை தேர்தலில் தோற்கடித்து அமெரிக்க ஜனாதிபதியான ரீகன் மன நல மையங்களுக்கான நிதியுதவி சட்டத்தை ரத்துசெய்தபடியால் மன நலபாதிப்படைந்தோர் பெரும்பான்மையோர் மனநல மையங்களில் தங்க முடியாமல் வெளியேற்றபட்டு துயர் அடைந்தனர்.
மன சிதைவு நோயாளிகளால் சாதாரண குடிமக்கள் பலர் பாதிக்கப்பட்டனர்.
ரீகனின் பர்சனல் டாக்ஸ் அட்வைசரின் மனைவி அவரது இரு மன நோயாளி மகன்களால் கொல்லப்பட்டார்.
Jodie foster (silence of the lambs) மேல் வெறி கொண்டு இருந்த ஒரு மனசிதைவு நோயாளியால் ரீகனே சுடப்பட்டார்....
2.கதை ஹிப்பி கலாச்சாரத்தை ஒட்டி எடுத்து செல்கிறது.அப்போதைய இசை, போதைபொருள்\புழக்கம், வீடில்லாதோர் நிலைமை கதையெங்கும் பின்னணியில் விரவி கிடக்கிறது.
ஒரு திரைப்படம் போல் கதையோட்டம் செல்கிறது....
ஓவியங்கள் ஓகே ரகம்
சில phrases……

HAPPINESS IS JUST THE ABSENCE OF PAIN

A BULLET CAN CHANGE THE WORLD

MONALISA …A THING A LOT OF PEOPLE IMAGINE VALUE IN……. GROUP HALLUCINATION

MORALITY IS JUST A COMFORT FOOD..IT HOLDS NO MEANING OUTSIDE OF OUR MINDS…..