Tuesday, 1 September 2015

DEADLY CLASS

………………….DEADLY CLASS……………………………VOULME 1

 ////////1987 REAGAN YOUTH//////////////////

AUTHOR………………………RICK REMENDER

ARTIST………………………WES CRAIG

PUBLISHER……………….IMAGE

RELEASED………………….JULY 2014

(THE REVIEW IS BEING WRITTEN ON THE BASIS OF CHRONOLOGY OF EVENTS BUT THE STORY IS BEING TOLD OTHERWISE.)
1987 ....
ஸான் பிரான்சிஸ்கோ....மன நிலை பாதிக்கப்பட்டவர்களால் தாய், தந்தை கொல்லப்பட சன்செட் சிறுவர் ஹோமில் சேர்க்க படுகிறான் மார்கஸ் லோபஸ்.

ஹோமின் சூழலில் வெறுப்புற்று ஆணி வெடிகுண்டு வைத்து அதை தகர்த்து சேதமடைய செய்து அங்கிருந்து தப்புகிறான் மார்கஸ்.

இந்த வெடிகுண்டு சம்பவத்தால் கடந்த இரண்டு வருடங்களாக போலிசால் தேடப்படும் குற்றவாளியாக இருக்கிறான் மார்கஸ்.

இதே சம்பவத்தால் ஏதோவொரு வகையில் பாதிக்கப்பட்ட “கோர முகம்” உடைய ஒருவனும் மார்கசை பழி வாங்க அவனை தேடி கொண்டு இருக்கிறான்.

ஸான் பிரான்சிஸ்கோ வீதிகளில் நடைபாதைவாசியாக காலம் கழித்து வரும் மார்கசுக்கு வாழ்வே வெறுப்பாக இருக்கிறது..

அவனுக்கும் ஓர் லட்சியம் உண்டு...அதுவே அவனை இவ்வுலகில் வாழ வைக்கிறது....
அமெரிக்க ஜனாதிபதி ரொனால்ட் ரீகனை கொல்வதுதான் அது.....

பெற்றோர் உடன் அமைதியான வாழ்வை சீர்குலைந்து போக காரணமானவர்....ரீகன்

மனநல காப்பகங்கள், மருத்துவ இல்லங்கள் ஆகியவற்றுக்கான நிதியுதவியை அவர் நிறுத்தியதால்தானே மனநல நிலையங்கள் உள்ளே இருக்க வேண்டிய பைத்தியங்கள் வெளியே விடப்பட்டு அவர்களால் தன் தாய், தந்தை கொல்லப்பட்டனர்....

அவர்கள் சாவுக்கு காரணமான ரீகன் கொல்லப்பட வேண்டிய ஆசாமி...

இந்த எண்ணம் மார்கஸ் மனதில் ஆழ பதிந்து இருந்தது.........

ஓர் நாள் இரவு சக நடைபாதைவாசி ஒருவன் மார்கசின் ஷூக்களை திருட முற்படுகையில் மார்கஸ் அவன் மேல் கோபம் கொள்கிறான். அவன் கால்களில் உள்ள பனி காரணமாக வந்த புண்களை பார்த்து பரிதாபம் கொண்டு தானாகவே ஷூக்களை கொடுத்து அனுப்புகிறான்..
இந்த களேபரத்தில் போலிசின் கண்களில் பட ஒருபோலிஸ் படையே அவனை துரத்துகிறது.


இறுதியில் ஒரு முட்டுசந்தில் மாட்டிகொள்ளும்அவனை ஒரு போலிஸ் அதிகாரி கொல்ல முயல அதிகாரியை பட்டாகத்தியால் குத்திகொன்று மார்கசை காப்பாற்றுகிறாள் சாயா என்ற இளம்பெண்...
..

மார்கசை தனது குரு மாஸ்டர் லின்-னிடம் அழைத்து செல்கிறாள் சாயா.

பின்னர் லின் விருப்பப்படி பாதி மனதாக KING’S DOMINION ACADAMY OF THE DEADLY ARTS என்ற பள்ளியில் சேருகிறான் மார்கஸ்.

இது தொழில்முறை கொலையாளிகளை உருவாக்கும், அவர்களுக்கு வேண்டிய பயிற்சிகளை கொடுக்கும் பள்ளி.

இந்த அகாடமியில் பல குழுக்கள் உண்டு. முக்கியமானவர்கள்

சி.ஐ.ஏ,  எப்.பி.ஐ இவர்களால் அனுப்பப்பட்டவர்கள்

தென் அமெரிக்க, லாஸ் ஏஞ்சல்ஸ் பகுதியினர்

போதைபொருள் கடத்துவோரின் வாரிசுகள்

ஜப்பானிய குழுவினர்(சாயா இந்த குழுதான்)

தென் அமெரிக்க குழுவின் ஹெட் சிக்கோ. மரியா இவனது கேர்ள்பிரென்ட்.மரியாவுக்கு மார்கசின் வசீகர தோற்றம் பிடித்து போகிறது.

மார்கசுக்கு தன்னை காப்பாற்றிய சாயாவின் மேல் க்ரஷ்.


மார்கசுக்கும், வில்லி என்றொரு மாணவனுக்கும் ஒரு கொலை பயிற்சி அசைன்மென்ட் கொடுக்கபடுகிறது.

டார்கெட்<<<<<< மார்கஸமிடமிருந்து ஷூக்களை திருட முயன்ற நடைபாதைவாசி.

பரிதாபமான அந்த ஆசாமியை கொல்ல மனம் வராது இருவரும் அந்தஆளை தப்பவிடுகின்றனர்..
ஏற்கனவே நடைபாதையில் தங்கியிருக்கும்போது அறிமுகமான ரோரி என்ற ஒரு ஆளுடன் போதைபொருள் உட்கொள்ளும் மார்கஸ், வில்லியிடம்  வியட்நாமில் ஒருகிராமத்தையே கொளுத்தியதாக அந்த முன்னாள் ராணுவ நபர் போதையில் உளற அப்பாவிகளை கொன்றதாக கோபமுறும் மார்கஸ் அந்த ஆளை கொன்று விடுகிறான்.

அகாடமி திரும்பும் மார்கஸ், வில்லி ஜோடியை லின்- ன் கோபம் வரவேற்கிறது. கட்டளைக்கு கீழ்படியாமை.தவறான.’’ இலக்கினை’’ கொன்றது ஆகிய காரணங்களினால் மார்க்ஸ்க்கு பதினைந்து நாள் தனிமைஇருட்டுசிறை வாசம் தண்டனையாக விதிக்க படுகிறது.

சில நாட்கள் கழித்து மரியா ரகசிய நிலவரை வழியாக மார்கஸை மீட்டு வெளி கொணருகிறாள்.
மரியா, சிக்கோ, சாயா,பில்லி, வில்லி (இவர்களுடன் காரில்  மார்கஸ்) haight ashbury என்னும் பகுதியை நோக்கி விரைகிறார்கள்.

Hippie hell என்று அழைக்கப்படும் இப்பகுதி ஹிப்பிக்கள் சங்கமிக்கும் இடம்.

பயணத்தின் நோக்கம் பில்லியின் விருப்பப்படி அவனது தந்தையை கொல்வது.....

(பில்லியின் தந்தை ஒரு முன்னாள் போலிஸ் அதிகாரி.போதை கடத்தல் தொழிலில் அதிக லாபம் வருவதை கண்டு அதில் முழு மூச்சாய் இறங்கி விட்டவர்.தனக்கு சிறிதும் விருப்பம் இல்லாத அகாடமியில் தன்னை சேர்த்து விட்டதாலும்,தன்னைஅவர் சிறிதும் நேசிப்பது இல்லை என பில்லி கருதுவதாலும் பில்லி அவரை கொலை செய்ய துணிகிறான்.)

(பயணத்தின்போது அவர்கள் காரை ஓவர்டேக் செய்வது ஹெல்மெட் அணிந்த”கோர முகத்தான்” என தெரிகிறது)

அதீத போதை பொருளை hippie hell-ல் உட்கொள்ளும் மார்கஸ் பிற மாணவர்களுடன் ஒரு ஹோட்டலில் தங்குகிறான்.மற்றவர்கள் வெவ்வேறு காரணங்களால் வெளி செல்ல பில்லி
அதே ஹோட்டலில் தங்கியுள்ள தனது தந்தையின் கழுத்தை நெறிப்பதை பார்த்து திடுக்கிடுகிறான் மார்கஸ்.பில்லி உதவிக்கு அழைக்கவே வெயிட் லிப்ட் பாரினால் அவரை தாக்கி கொன்று விடுகிறான் மார்கஸ்.

ரத்த கறையை கழுவ பில்லி செல்ல குழப்பமான எண்ணங்களுடன் வரும் மார்கஸை அரைகுறை ஆடை அணிந்த மரியா தன்அறையின் உள்ளே இழுக்கிறாள்.தடுமாறும் மார்கசையும் அலங்கோலமாக உள்ள மரியாவையும் அப்போது அறையின் உள்நுழையும் சிக்கோ பார்த்து வெறிகொள்கிறான்.

மார்கஸ் ஜன்னல் வழியே தப்ப தடுக்க முயலும் மரியாவை தள்ளி மார்கஸை துரத்துகிறான் சிக்கோ.

ஓரிடத்தில் சிக்கிகொள்ளும் மார்கசை உடல்வலுமிக்க சிக்கோ கடுமையாக தாக்கி காயப்படுத்துகிறான்.

அங்கு வந்து இதை தடுக்க முயலும் நான்கு போலிஸ் அதிகாரிகளை சுட்டுகொன்றுவிடுகிறான்.

இந்த களேபரத்தில் தவழ்ந்து தப்பி செல்ல முயலும் மார்கசை மறுபடியும் சிக்கோ தாக்க முற்பட அங்கு வந்து சேரும் வில்லி,பில்லி,மரியா,சாயா அதை தடுக்க முற்படுகிறார்கள்.

பல்வேறு குழப்பங்களிடையே மரியாவால் சிக்கோ கொல்லபடுகிறான்.

அப்போது அங்கு வரும் கோர முகத்தான் படுகாயமுற்றுள்ள மார்கஸை தான்தான் மார்கசின் ஜென்ம விரோதி எனவும் தன்னால் சித்திரவதைப்பட்டு சாக உடலை தேற்றிவைத்து கொள்ளும்படியும் எச்சரித்து சிக்கோ உடலுடன் செல்கிறான்.(தனதுபூனைக்கு உணவாக கொடுக்க)

பல்வேறு எண்ணங்களுடன் மரியா குழு அகாடமி நோக்கி திரும்பி செல்கிறது

//////////////////////////////////////////////////////முதல் பகுதி நிறைவு//////////////////////////////////////////////////////////////////////////////////////










பின் இணைப்பு:
1.தலைப்பில் உள்ளபடியால் ரொனால்ட் ரீகன் பற்றி படிக்க வேண்டியதாயிற்று.
ஜிம்மி கார்ட்டரை தேர்தலில் தோற்கடித்து அமெரிக்க ஜனாதிபதியான ரீகன் மன நல மையங்களுக்கான நிதியுதவி சட்டத்தை ரத்துசெய்தபடியால் மன நலபாதிப்படைந்தோர் பெரும்பான்மையோர் மனநல மையங்களில் தங்க முடியாமல் வெளியேற்றபட்டு துயர் அடைந்தனர்.
மன சிதைவு நோயாளிகளால் சாதாரண குடிமக்கள் பலர் பாதிக்கப்பட்டனர்.
ரீகனின் பர்சனல் டாக்ஸ் அட்வைசரின் மனைவி அவரது இரு மன நோயாளி மகன்களால் கொல்லப்பட்டார்.
Jodie foster (silence of the lambs) மேல் வெறி கொண்டு இருந்த ஒரு மனசிதைவு நோயாளியால் ரீகனே சுடப்பட்டார்....
2.கதை ஹிப்பி கலாச்சாரத்தை ஒட்டி எடுத்து செல்கிறது.அப்போதைய இசை, போதைபொருள்\புழக்கம், வீடில்லாதோர் நிலைமை கதையெங்கும் பின்னணியில் விரவி கிடக்கிறது.
ஒரு திரைப்படம் போல் கதையோட்டம் செல்கிறது....
ஓவியங்கள் ஓகே ரகம்
சில phrases……

HAPPINESS IS JUST THE ABSENCE OF PAIN

A BULLET CAN CHANGE THE WORLD

MONALISA …A THING A LOT OF PEOPLE IMAGINE VALUE IN……. GROUP HALLUCINATION

MORALITY IS JUST A COMFORT FOOD..IT HOLDS NO MEANING OUTSIDE OF OUR MINDS…..










No comments:

Post a Comment