பிறப்பு.........1840(தோராயமாக)
தந்தை.......கென்னத் வில்லர்
தாய்.......மே வில்லர்(mae willer)(டெக்ஸ் விவரம்
அறியும்முன் இறந்து விடுகிறார்)
மூத்த சகோதரன்.....ஸாம் வில்லர்
பிறப்பிடம்......டெக்சாஸ்
மாகாணத்தில் பிட்டர் ஸ்பிரிங்ஸ் கிராமம்.
பகுதி...ஒன்று.............
.......கென்னத் வில்லர் தனது மகன்கள் மற்றும் gunny bill எனும் வயதான
உதவியாளர் துணையுடன் ஒரு சிறு பண்ணையை நடத்தி வருகிறார்...
gunny
bill பிறிதொரு தந்தையை போல் துப்பாக்கியை கையாள ,குறி
தவறாது சுட டெக்ஸ்க்கு கற்று தருகிறார்......
டெக்ஸ்க்கு 15வயது இருக்கையில் போக்கிரி கும்பல் ஒன்று பண்ணையை
சூறையாடி கென்னத் வில்லரை கொன்று தப்பி செல்கிறது...
... gunny bill –ஐ உடன் அழைத்து கொண்டு மெக்சிகோ வரை அந்த கும்பலை விரட்டி
செல்லும் டெக்ஸ் அனைவரையும் கொன்று பழி தீர்க்கிறார்.
மீண்டும் டெக்சாஸ் திரும்பும் வழியில் Rurales எனப்படும் மெக்ஸிக
எல்லை ரோந்து காவல் படையை இருவரும் எதிர்கொள்கின்றனர்.
பெரும்பாலான எதிரிகள்
கொல்லப்பட்டு சிலர் தப்பிசெல்கின்றனர்.இந்த சண்டையில் gunny bill
கொல்லபடுகிறார்......
அவர்உடலை தன் பண்ணைக்குஎடுத்து வந்து
புதைத்தபின் தனது பங்குகளை சகோதரன் ஸாமிடம் ஒப்படைத்து ஊரை விட்டு கிளம்புகிறார்
டெக்ஸ்....
---------------------------------------------------------------------------------------------------------------------------------------------
பகுதி இரண்டு.........
அபிலீன் நகரம் வரும் டெக்ஸ் அங்கு கார்லிஸ்
சகோதரரர்களிடம் வேலையில் சேர்கிறார்...rodeo என்ற ஊர் ஊராக சென்று குதிரை,காளைகள் அடக்கும்
சாகசங்கள்,சுருக்கு கயிறு வீசும் ஜால வித்தை (லாசோ) போன்ற கேளிக்கையூட்டும்
நிகழ்ச்சிகளை நடத்துபவர்கள் கார்லிஸ் & கோ.
அற்புதமான ரோடியோ வீரராக உருமாறுகிறார்
டெக்ஸ்.....இந்த காலகட்டத்தில்தான் டைனமைட் என்ற ஆக்ரோஷமான குதிரையை அடக்குகிறார்.
பின்னர் நெடுநாள் டைனமைட் அவரின்உற்ற நண்பனாக விளங்குகிறது.......
இரண்டு வருடங்கள் இவ்வாறு கழிந்தபின் சகோதரன்
ஸாம் கொல்லப்பட்ட சேதி டெக்சை வந்தடைகிறது.
சாமின் பண்ணையை அடையும்பொருட்டு உள்ளூர் ஷெரீப்
காலின் என்ற நபரின் உதவியோடு டாம் ரெபோ என்ற கால்நடை பண்ணை முதலாளி செய்த கொலை
எனதெரிய வருகிறது.....
வெகுண்டுஎழும் டெக்ஸ் டாம்ரெபோ மற்றும் அவரின்
கைகூலிகளை ஒட்டுமொத்தமாக தனியாளாக வேரருக்கிறார்.
ஆனால் தப்பிவிடும்
ஷெரீப் காலின் டெக்ஸ் மேல் பல இல்லாதபழிகளை சுமத்தி சட்டத்தினால்தேடப்படும் ஓர்
குற்றவாளி என்ற நிலையை உருவாக்குகிறார்.....
பகுதி 3
மேற்கூறிய சம்பவங்களுக்கு பிறகு ராட்
ஸ்டேன்டன்,டிக் எனும் நண்பர்கள்உடன் இணைந்து கால்நடை விற்கும் குழுவாக டெக்ஸ்
செயல்படுகிறார்...
அமெரிக்க உள்நாட்டு போரில் தெற்கத்தியர்களுடன்
சேர்ந்து போரிட விரும்பும் ராட் –ன் கருத்தை மறுக்கிறார் டெக்ஸ்....
மனிதர்கள் அனைவரும் சமம்......அடிமை முறையை தான்
விரும்பவில்லை என வெளிப்படையாகவே கூறுகிறார்....
ராட் தன்வழியில் செல்லவிரும்பி தனதுபங்கு
மந்தைகளை பெற்று பிரிந்து செல்கிறார்.......
வடக்கு நோக்கிசெல்லும் டெக்ஸ்,டிக் வழியில்குறுக்கிடும்
கான்பெடரேட் சிறு படைபிரிவிலிருந்து தங்கள் மந்தையை காப்பாற்றி அதை விற்று
பணத்துடன் திரும்புகின்றனர்....
செயின்ட் லூயிஸ் நகர் செல்லும் வழியில் கெண்டகி
மூன்றாவது குதிரை படையை சார்ந்த லெப்டினன்ட் க்லைன்டர் என்னும் ஸ்க்வுட்டை உயிர்
அபாயத்திலிருந்து காக்கின்றனர்.
பின்னர் போரில் காயமுறும் க்லைண்டர் இவர்களிடம்
முக்கிய செய்திஒன்றை கேப்டன் டார்க் இடம் கொடுக்கசொல்லி அனுப்புகிறார்...
கௌபாய்களை சந்திக்கும் டார்க் இவர்களை
ஸ்கவுட்டுகளாக சேரும்படி வேண்டுகிறார்...
சில நிபந்தனைகளுடன் இருவரும்
ஒப்புகொள்கின்றனர்....
சில காலம் கழித்து சிலோ என்ற இடத்தில் யூனியன்
மற்றும்கான்பெடரேட் இருவருக்கும் நடக்கும் கோரயுத்தத்தில் குற்றுயுராக களத்தில்
கிடக்கும் நண்பன் ராட்ஸ்டேன்டன்-ஐ சந்திக்க நேருகிறது.
மரண தறுவாயில் நண்பனின் இனிய வார்த்தைகள்
டெக்ஸ்-ன் மனத்தை சஞ்சலம் செய்கிறது....அருமையான நண்பர்களை பிரிக்கும்
அர்த்தமில்லாத போரை அவர்மனம்வெறுக்கிறது...
இதன்பின் நேரடியாக போரில்ஈடுபடாது போரில்
காயமுற்றோர்க்கு உதவுவது,உணவு வழங்கும் பிரிவு ஆகிய பகுதிகளில் பணி புரிகின்றார்..
டெக்ஸ் தாய்மண்ணான டெக்சாஸ் கான்பெடரேட் பக்கம்
சார்ந்தது என்பது குறிப்பிட தகுந்தது
பகுதி 4
போர் முனை பகுதிகளில் பணியாற்றினாலும் இன்னமும்
தேடப்படும் ஒரு குற்றவாளியாகவே கருதபடுகிறார் டெக்ஸ்....
அவரது அநியாயம் நடந்தால் தட்டி கேட்கும்
மனப்பான்மை,துப்பாக்கியை மின்னல் வேகத்தில் கையாளும்திறன் அவரை பிரபலப்படுத்துகிறது
இதை கேள்விப்படும் மேற்கு பிராந்தியத்தின்
சிறப்பு அரசாங்க உயர்அதிகாரியான மேஜர் ஹெர்பர்ட் மார்ஷல் அவருக்கு பொது மன்னிப்பு
வழங்கி மேற்கு பகுதியின் ரேஞ்சர் பிரிவில் சேர்த்து விடுகிறார்...
இப்படி ரேஞ்சர் பணியில் சேரும் டெக்ஸ் அடிக்கடி
கிட் கார்சனுடன் இணைந்து வேலைசெய்ய நேரிடுகிறது....இருவரும் உயிர் நண்பர்கள்
ஆகின்றனர்...
அமெரிக்க ராணுவ இதர விஷயங்களை மெக்ஸிகோவுக்கு
உளவு சொல்லும் ஒரு கும்பலை பிடிக்க பணிக்கபடுகிறார் டெக்ஸ்....
இப்போதுதான் தனது முக்கியஎதிரியான ஸ்டீவ்
மெபிஸ்டோ டிகார்ட்-ஐ சந்திக்கிறார் டெக்ஸ்...
மெபிஸ்டோ (சாதாரண மேஜிக் நிபுணன் ஆகஇருக்கும்
மெபிஸ்டோ பின்னாளில் ஆவியுலக பேச்சாளன், மாயா உருவெளி தோற்றங்களை ஏற்படுத்தும்
திறமையாளி, மிஸ்டிக் பவர் ஆசாமி எனபல அவதாரங்கள் எடுக்கிறார்) மற்றும் அவரது
சகோதரி லில்லி ஆகிய இருவரும்தான் உளவு கடத்துவதில் சூத்திரதாரிகள் என்று டெக்ஸ்
கண்டு பிடிக்கும் சமயம் அமெரிக்க லெப்டினன்ட் ஒருவரை கொலைசெய்து அந்த பழியை டெக்ஸ்
மேல் விழும்வண்ணம் சூழ்ச்சிவலை செய்து தப்புகின்றனர் மெபிஸ்டோவும் லில்லியும்....
கார்சன்உதவியுடன் சிறையிலிருந்து தப்பும் டெக்ஸ்
மெபிஸ்டோ ஜோடியை தேடி மெக்ஸிகோ செல்கிறார்..
அங்கு ஒரு பெரியஎஸ்டேட் வாங்கி செட்டில்
ஆகிஉள்ளனர் மெபிஸ்டோ&கோ
மெக்சிகோவின் ஊழல் மலிந்த அரசாங்கத்தை எதிர்த்து போராடும் montales எனும் போராளியின்
துணையுடன் மெபிஸ்டோ &லில்லியை கைது செய்து தன் மேல் உள்ள களங்கத்தை
துடைக்கிறார் டெக்ஸ்
montales பின்னாளில் சிகுகுவாவின்
கவர்னர், மெக்ஸிகோ வைஸ்பிரசிடென்ட் என
உயர்கிறார்
பகுதி 5
அமெரிக்கா திரும்பும் டெக்ஸ்-க்கு மறுபடியும்
ரேஞ்சர் பணி வழங்கபடுகிறது..
நவஜோ பழங்குடியினருக்கு ஆயுதங்கள் கடத்தும்
கும்பலை பிடிக்க ஆணை வருகிறது...
இதுபற்றிய புலனாய்வில் டெக்ஸ்
ஈடுபட்டிருக்கும்போது நவஜோ தலைவர் ரெட்ஆரோவால் சிறை பிடிக்கபடுகிறார் டெக்ஸ்..
நவஜோக்கள் அவரைகொல்ல எத்தனிக்கும்போது
ரெட்ஆரோவின் மகள் லிலித் டெக்ஸ்-ஐ மணம் செய்து கொள்ள விரும்புவதால் காப்பாற்ற
படுகிறார்..
லிலித்-ன் முடிவுக்கு காரணம் ரேஞ்சர் வில்லையை
அணிந்துள்ள டெக்ஸ் கொல்லபட்டால் அமெரிக்க ராணுவம் அதை காரணமாக வைத்து தொடுக்கும்
போரால் இருபுறமும் ஏற்படபோகும் ரத்தக்களரியை தடுப்பதற்கே.........
நவஜோ பெண்ணை மணந்து இருப்பதால் வெள்ளையர் இடையே
ஆரம்பத்தில் குழப்பம் ஏற்படாதிருக்கவும்,ஒவ்வொருமுறையும் ஹெர்பர்ட் மார்ஷலிடம்
அனுமதி பெற்று செயலாற்றுவதை தவிர்க்கவும் கறுப்பு உடை அணிந்து அவர் பணியாற்றுவதை கண்ட’நவஜோக்கள்
அவருக்குஇட்டபெயர்தான்
Aquilla della notte………. இரவு கழுகு...
ரெட்ஆரோவின் மூலம் ஆயுதகடத்தலில் ஈடுபடுவோர்
பிரெட் பிரன்னன், ஜான் டெல்லர் என்றஇருவர்
எனஅறிந்து கொள்ளும் டெக்ஸ் அந்த கும்பலையே கார்சன் உதவியுடன் கைதுசெய்து சிறையில்
தள்ளுகிறார்..
திருமண வாழ்க்கையின் பொறுப்புகள் டெக்ஸ்-ஐ
ரேஞ்சர் பதவியிலிருந்து
ராஜினாமா செய்ய வைக்கின்றன.......
பகுதி 6
புரிதல் ஏதுமின்றி சூழ்நிலை வசதி கருதி மணம் செய்த
டெக்ஸ்- லிலித் காலப்போக்கில் மனமொத்த தம்பதி ஆகின்றனர்..
இரண்டு வருடங்களில் கிட் பிறக்கிறான்..
( கிட் கார்சன் காட்பாதர் என்பதால் அந்த பெயர்)
சின்னகழுகு என நவஜோக்கள் அழைக்கின்றனர்.....
இந்த
இனிமையான வாழ்வு நீடிக்கவில்லை......
ஊழல் அரசியல்வாதிகள் சிலர்உதவியோடு
சிறையிலிருந்து வெளியேறும் பிரெட் பிரன்னன், ஜான் டெல்லர் இருவரும் மறுபடியும் ஆயுத கடத்தலில் ஈடுபட
ஏதுவாக ராணுவ கிடங்குகளில் இருந்து திருடப்பட்ட பெரியம்மை நச்சு கிருமிகள் அடங்கிய
போர்வைகளை நவஜோ பகுதியில் புழங்க விடுகின்றனர்...
இதனால் பல நவஜோ கிராமங்களே அழிகின்றன.
இதில் லிலித்-ம்அடக்கம் ....
சம்பவம் நடக்கும்போது கிட்,டெக்ஸ் வேறு
பிராந்தியம் சென்றுஇருப்பதால் தப்புகின்றனர்..
மனைவி இறந்து சிலமணி நேரம் கழித்து அங்கு வரும்
டெக்ஸ் அவரது கல்லறை அருகே அதற்கு காரணமானவர்களை அழிக்க சபதம் பூணுகிறார்.
சில
மாதங்களில் ஜான் டெல்லர் கொல்லபடுகிறார்...
டெக்ஸ்-ஆல் எப்போது கொல்லபடுவோமோ என்ற
அச்சத்தில் வாழும் பிரெட் ப்ரன்னன் பைத்தியம்பிடிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டு பல
வருடங்கள் கழித்து டெக்சால் கொல்லபடுகிறார்....
பகுதி 7
தன் மகனை வளர்க்க நவஜோ பிராந்தியம் செல்லும்
டெக்ஸ்க்கு டைகர் ஜாக் எனும் வாலிபன் உற்ற துணையாக மாறுகிறான்...
ஏற்கனவே இருவரும் சந்தித்துள்ளனர்.
முன்னொரு சமயம் தனது மனைவியை கொன்ற யுடேஸ்
பிரிவினரை டைகர்ஜாக் பழி வாங்க செல்லும்போது டெக்ஸ் அதற்கு உதவி
செய்துஇருக்கிறார்...
இருவரும் ரத்த சம்பந்த சகோதரர் போல்
மாறுகின்றனர்..........
லிலித் மரணத்திற்கு பிறகு ரெட்ஆரோ டெக்ஸ்-ஐ
வளர்ப்பு மகனாக தத்தெடுப்பதால் நவஜோ இன தலைவனாக உருவெடுக்கிறார்......
மற்ற பழங்குடியின தலைவர்களுடன் நட்பு
பூணுகிறார்....
அபாச்சே தலைவர் கோசைஸ்-யுடன் சகோதர நட்பு
ஏற்படிகிறது...
நவஜோ தலைவராய் இருப்பதிலும்
பிரச்சினைகள்இல்லாமல் இல்லை..
லிலித்-ன் ஒன்று விட்ட சகோதரன் சாகுவா தன் தாய்
ஜெண்டாவின் தூண்டுதலால் வெள்ளையர் ஒருவர் நவஜோ தலைவனா என போர்க்கோலம் பூணுகிறான்.
கிட் வில்லரை சாகுவா தரப்பு கடத்தி செல்வதால்
பெரும் யுத்தம் ஏற்படும் சூழ்நிலை தோன்றுகிறது...
எதிர்பாராதவிதமாக தாய்ஜெண்டா மரணமடைவதால்
அதிர்ச்சியுறும் சாகுவா சமாதானத்திற்கு வருகிறான்....
தலைமை பொறுப்பை விட்டு தர டெக்ஸ் முன்வந்தும் மறுக்கிறான்....
பின்னர் பெரியவர்கள் ஏற்பாட்டின்படி
மலைபகுதிக்கு சாகுவா, சமவெளி பகுதியில் டெக்ஸ் தலைவர் என முடிவாகிறது.
...
This comment has been removed by the author.
ReplyDeleteஅருமை
ReplyDeleteWow. Awesome post on Tex. 1st time reading the whole story
ReplyDeleteஇது இது இதைத்தான் தேடிக்கொண்டு இருந்தேன்,செனா அனா ஜி....டெக்ஸின் சரித்திரம் இவ்வளவு விரிவாக ,வரலாற்று தகவல்களுடன் அருமை...சூப்பர் ..
ReplyDeleteவாழ்த்துக்கள் அற்புதமான பதிவுக்கு...
நன்றிகள் அருமையான உழைப்புக்கு...
லைட்டா ஒரு லேசான முறைப்பு-இத்தனை நாட்கள் இதை நண்பர்கள் அறிய செய்யாமல் இருந்ததற்காக....
நன்றிகள் டெக்ஸ்.....நண்பர்கள் கமென்ட் இடும்போது அதற்கு பதில் உடனே அளிக்க நேரம் இல்லாமல் போவதால் அது மரியாதை குறைவாக இருக்குமே என்பதாலேயே இதுவரை லிங்க் அளிக்கவில்லை.....ஆனால் டெக்ஸ்-க்கு என இருக்கும் ஒரு கிளப்-ல் எனது குறும் பதிவு இடம் பெறுவது எனக்கு மகிழ்ச்சியும் பெருமையும் அளிக்கும் விஷயம் என்பதாலும்,டெக்ஸ் பற்றி பிற நண்பர்கள் அறிய இது ஒரு வாய்ப்பு என்பதாலும் இரட்டை சந்தோஷமே....
Deleteபதிவிட்ட அனைத்து நண்பர்களுக்கும் நன்றிகள் பல...
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteசெனா அனாஜி நன்றி! டெக்சின் ரிஷிமூலத்தை வரலாற்று தகவல்களுடன் இவ்வளவு எளிமையாக விளக்கியதற்கும் ரொம்பவே தேங்க்ஸ்்/\/\/\
ReplyDeleteமிக அருமையான தெளிவான பதிவு... முடிந்தால் இதன் கதை வெளியீடகளைப் பற்றியும் குறிப்பிலாமே...
ReplyDeleteலிலித்துடன் டெக்ஸ் திருமணம் ,கிட்பிறப்பு ,அந்த கம்பளி கம்பெனி ,ப்ராஸ்னன்,ரெட் ஆரோ உதவியுடன் கொலைகாரர்களை பழி வாங்குதல் ....இவைகள் மூன்று பாக சாகசமான ...லயன் 191இரத்த ஒப்பந்தம்
Delete192தணியாத தணல்
193காலன் தீர்த்த கணக்கு ...இவற்றில்விவரிக்கப்பட்டுள்ளது...
சரவணன்....நீங்கள் கோருவது மிகப்பெரும் பணி....
Deleteமாயாவி சிவா போன்ற ஜாம்பவான்கள் அதை எளிதில் செய்வர்....
அதை ஆவலுடன் எதிர்நோக்கியிருக்கிறேன்....உங்களை போலவே...
பதிவைப்பற்றி சொன்ன மாம்சுக்கு நன்றி!ஆனா ஒரு வருடம் கழித்தா சொல்வீர்கள்?????
ReplyDeleteஎனக்கே இன்று தானே தெரியும்.
Deleteசெனா அனா ஜி இந்த பதிவையும் தளத்தையும் மிக ரகசியமாக வைத்து இருந்ததே காரணம் பேபி.இன்று தானே அனைவரும் அறியவந்த நந்நாள்...
இதைப்போன்ற ரகசிய பதிவுகள் மற்றும் தகவல்கள் வெளிக்கொணரும் நோக்கம் தானே அந்த Tex டெக்ஸ்வில்லர் கிளப் தொடங்கியதற்கான முழு முதல் காரணம் ...
ஒகே மாம்ஸ்
DeleteThis comment has been removed by a blog administrator.
Deleteபதிவைப்பற்றி சொன்ன மாம்சுக்கு நன்றி!ஆனா ஒரு வருடம் கழித்தா சொல்வீர்கள்?????
ReplyDeleteWow.wonderful.i am first time reed the tex history with joyful.
ReplyDeleteவர்ரே வாஹ்!!!
ReplyDeleteஎங்க சார் வர்ரது
DeleteThis comment has been removed by a blog administrator.
Deleteலாலேட்டா!!!
Deleteகேரளாவுல உங்களை தேடிட்டு இருக்காங்களாம் போங்க.!
ஹலோ பர்த்டே பாய்..!!!
Deleteஇந்த லுல்லாயிதானே வேணாங்கறது..
:-))
நீங்க,டெக்ஸ் விஜய் எல்லாம் ஏற்கனவே லயன் ப்ளாக்ல படிச்சதுதானே இது...:-)
இருந்தாலும் உங்க எழுத்தைப் படிப்பதும் ஒரு தனி சுகம்.
Deleteசரவணபவன்ல இட்லி சாப்பிட்டாச்சுன்னா காஞ்சிபுரம் இட்லி போரடிக்குமா என்ன.!?
தன்யனானேன்....!!!!!
Deleteஇதையே ஒரு காமிக்ஸா போடலாமா அருமையான பதிவி...
ReplyDeleteகணேஷ்....இவை அனைத்தும் இது வரை வெளிவந்த டெக்ஸ் கதைகளின் சுருக்கமே....
Deleteமுன்பின்னாக வந்தவற்றை கால கிரயமாக முடிந்தவரை சீராக இருக்குமாறு எழுதப்பட்ட மொழிமாற்ற தகவல் தொகுப்பு....
இதையே ஒரு காமிக்ஸா போடலாமா அருமையான பதிவி...
ReplyDeleteசெனா அனா!,
ReplyDeleteகப்கேக் கிளிப்டன்!!!!
வொய்?!?!?!
ஹா...ஹா...க்ளிப்டன் முதல் கதை அப்பத்தான் படிச்சு முடிச்சு இருந்தேன்....
Deleteஅப்படியே கிட்டுக்கு எப்போ கல்யாணம்னு ஆராய்ச்சி பண்ணி சொல்லிட்டிங்கன்னா பதிவு பூரணமாயிடுமே!?
ReplyDeleteகிட்டுன்னா
கிட் வில்லர் இல்லை
கிட் கார்சன் :-)
இப்பத்தானே உங்க கல்யாண நாள் முடிஞ்சுது...அப்படி எல்லாம் தெரிஞ்சும் அடுத்தவங்க கஷ்டபடுவதை பாக்க உங்களுக்கு எவ்ளோ ஆசை...?;-)
Deleteசெல்வம் சார் ...அருமை ....அருமை ...வில்லரின நாயக சாகஸத்தை அறிந்த பலருக்கு அவரின் வரலாற்றை அழகாக அளித்துள்ளீர்கள் ..மனமார்ந்த பாராட்டுக்கள் ..இந்த லிங்கை லயன் ப்ளாகில் கொடுத்தால் பலரும் மகிழ்வர் ....;-)
ReplyDeleteமேலும் நமது இதழின் மூலம் டெக்ஸின் இல்லாளை பற்றி மட்டுமே அறிந்து இருந்தேன் ..இப்பொழுது அவரின் முழு வரலாற்றை அறியும் பொழுது மனதில் டெக்ஸ் ஒரு நிஜ நாயகர் போல ஓர் எண்ணம் ..மீண்டும் நன்றி ...
DeleteThis comment has been removed by a blog administrator.
Deleteநன்றி பரணி.......!!!!!!!
Delete@ செல்வம் அபிராமி
ReplyDeleteஅருமை..! லயன் 250 வரும் தருவாயில் நீங்கள் லயன்ப்ளாக்கில் விவரித்த டெக்ஸ் வில்லரின் வரலாறு திரும்ப திரும்ப படிக்க தூண்டும் ஒன்று,பரணிதரன் கொடுத்த லிங்கில் மீண்டும் படிக்க வாய்ப்பு கிடைத்தது.ரெட்டை மகிழ்ச்சி..!
நன்றிகள் மாயாவிஜி.......
Deleteஆ!!!! செனா அனா, உங்களுக்கு ப்ளாக் இருக்கா!!! அதுல அப்பப்போ எழுதிக்கிட்டிருக்கீங்களா?!! அதுவும் இங்கிலீச் காமிக்ஸு பத்தியா?!!! அதுவும் இங்கிலீச்லயேவா?!!! இதுக்கெல்லாம் உங்களுக்கு நேரம் கிடைக்குதா?!!!
ReplyDeleteஈஸ்வரா... லோகத்துல என்ன நடக்குதுனே புரியலையே!!!!!
ஆச்சர்யம் apart, என் வாழ்த்துகளும் வந்தனங்களும்! _/\_
காமிக்ஸுக்காண்டி நீங்க செய்ய வேண்டியது இன்னும் நிறைய பாக்கி இருக்கு! பின்னிப் பெடலெடுங்க செனா அனா ஜி!
இங்க பார்றா.....ப்ளாக் ஆரம்பிங்கன்னு சொன்னவரே இப்படி சொல்றாரு.....விஜய் லயன் ப்ளாக்ல நீங்க சொன்னபின்னாடிதான் இதை ஆரம்பிச்சேன்....:-)
Deleteஆனால் ஒரு பிளாக்கருக்கான எழுத்து வன்மையும் தெளிவுற பதிவிடும் பக்குவமும் இன்னமும் கைவராத காரணத்தால் இதனை பழகு பயிற்சி எனவே கொள்ளலாம்..
////இதுக்கெல்லாம் உங்களுக்கு நேரம் கிடைக்குதா?!!!///
வீட்டில் அவர்கள் பின்னிரவுகளில் ரெகார்டட்சீரியல் பார்த்து கொண்டிருக்கும்போது கேப்பில் எழுதப்பட்டவை...:-)
////அதுவும் இங்கிலீச் காமிக்ஸு பத்தியா?!!! அதுவும் இங்கிலீச்லயேவா?!!! ///
படிக்க யாருமில்லன்னா நாம எழுதறதுதான் இங்க்லிபீசு...:-)
நாமதான் ஷேகஸ்பீரு....:-)
எக்சலண்ட் போஸ்ட். பொது காமிக்ஸ் ரசிகரான எனக்கே உள்ளுக்குள்ள ஜிவ்னு இருக்கு இதை படிக்கும்போது. டெக்ஸ் விசிறிகள் நிச்சயம் ப்ளாட் ஆயிடுவாங்க.. டெக்ஸ் ஒரு சகாப்தம்கிறது இதில் ப்ரூவ் ஆகுது. பழசு என்பதால் வரியமைப்பு, கொஞ்சம் ப்ளோ சிக்கல் இருக்கு போலிருக்கு. கொஞ்சம் ரீரைட் பண்ணிடுங்க. அதோடு உங்களுக்கே தெரியும்னு இப்படி சட்டென முடிக்காமல் பின் வந்த வரலாற்றுச் சுருக்கத்தையும் சேர்த்து முழுமையாக்கிடுங்க! டெக்ஸ் பற்றிய உணர்வுப்பூர்வமான கட்டுரையாக அது இருக்கும். ஏதும் மேகசின்ல போடச்சொல்லலாம். ஆவன செய்க!
ReplyDeleteநன்றி......ஆதி தாமிரா....ரீரைட் செய்ய முயல்கிறேன்...
Deleteஅருமையான பதிவு...
ReplyDeleteநன்றி MP சார்!!!!
Delete***** என் பெயர் டைகர் *****
ReplyDeleteமனுசனாய்யா அந்தாளு? இல்ல கேக்குறேன்! ஒரு ஒத்தை ஆளு எப்படிய்யா இந்த அளவுக்கு அர்ப்பணிப்போட கதையமச்சு, வரைஞ்சு , வசனங்களைக் கோர்த்திருக்க முடியும்?
படம் வரைஞ்சாலும் அப்பசுப்பமா வரைஞ்சுடலயே...! ஒவ்வொரு ஃபிரேமுக்குள்ளயும் எவ்வளவு டீடெய்ல்ச வச்சிருக்கான்! வரைஞ்சிருக்கான்னுகூட சொல்லக்கூடாது... அந்தாளு வாழ்ந்திருக்கான்யா... வாழ்ந்திருக்கான்! ராட்சஸன்!
இன்னொன்னு - நம்ம வாத்தியாரின் 'வரலாற்றின் சில சிகப்புப் பக்கங்கள்' மட்டும் இல்லேன்னா இவ்வளவு ஆர்வமா படிச்சுருக்கவே முடியாதுதான்! அந்த முன்னுரைதான் "யே... யப்பா!"னு ஒரு பிரம்மிப்பை ஏற்படுத்தி, சந்தைக்கடைக்குள்ள பூந்தா மாதிரி கொசகொசனு போகும் கதையை அப்படியே லாவகமா நகர்த்திக்கிட்டுப் போகுதுனு உறுதியாச் சொல்லலாம்! யாரா இருந்தாலும் மொதல்ல அந்த முன்னுரையப் படிச்சுட்டு அப்புறம் கதைக்குள்ள போங்க... சொல்லிப்புட்டேன்!
அப்பறம், இந்த மொழிபெயர்ப்பையும்... வசனங்களை அமைச்சுருக்கற விதம் பத்தியும் சொல்லியேயாகணும்க! பக்கத்துலயே இருந்து நாமே அவங்க பேசுறதையெல்லாம் கேட்டுக்கிட்டிருக்காப்ல அப்படியொரு இயல்பான வசனங்கள்!! மொழிபெயர்த்தது யாருன்னு தெரியலை... ( கருணையானந்தமா, வாத்தியாரா?) ஆனா யாரா இருந்தாலும் எழுதித் தள்ளிய அந்தக் கைகளுக்கு மேற்கத்திய பாணியில் ஒரு பூக்கொடுத்து, புறங்கையில் ஈரமாய் ஒரு உம்மாவும் கொடுக்கலாம் தான்! (அனேகமா , EBF வரும்போது வாத்தியார் கையில க்ளவுஸ் மாட்டிக்கிட்டுத்தான் வருவார்னு நெனக்கிறேன் ஹிஹி)
CBFல பரிட்சை வச்சா மாதிரி இதுலயும் வச்சார்னா , இப்பவும் மூனரை மார்க்கை தாண்டமாட்டேன் தான்! ஆபீஸுக்கு ஒருநாள் லீவு போட்டுட்டு ஒரு தபா தான் படிச்சிருக்கேன். இன்னொரு தபா படிக்க வாய்ப்புக் கிடைச்சா... கூடக் கொஞ்சம் சேர்த்தே மார்க்கு வாங்கமுடியும்! முயற்சிக்கிறேன்!
சுமாரான கதை அப்படீ இப்படீனு கேள்விப்பட்டிருந்ததால இது ஊத்திக்குமோனுதான் நெனச்சிட்டிருந்தேன்! ஆனா பிரம்மிக்க வச்சுப்புடுச்சு!
ச்சிம்ப்பிளா சொல்லோணுமின்னா... முத்துவின் மணிமகுடத்துல இன்னோரு வைரக்கல்லுங்க!
அச்சச்சோ! அங்கே போடவேண்டியதை இடம்மாறி இங்கே போட்டுட்டேன். செனா அனா அவர்களே... மன்னிச்சூஊஊ!
Deleteஅட...இது நம்ம ப்ளாக் ...இதுக்கு போய் எதுக்கு மன்னிச்சூ...???
Deleteஇப்படியாவது டைகரும் டெக்ஸும் ஒண்ணா சேர்ந்த சரி...;-)
நீண்ட நெடு நாள் ஐயங்கள் தீர்ந்தது!
Deleteமிக்க மகிழ்ச்சி பாஸ்!
ஹ்ம்ம்...'தல' தல எடுக்கும் முன் பல சிரமங்கள் பட்டிருக்கார் போல !
Every Man Has a Past!
Every Thala, A History!
Very good information.
ReplyDeleteExcellent work sir
ReplyDeleteடெக்ஸ் கதைகள் தலை வாங்கி குரங்கில் இருந்து தொடர்ந்து படித்து வருகிறேன் இதை படித்த பிறகுதான் இதுவரை படித்த டெக்ஸ் கதைகளை முழுமையாக படித்த உணர்வு .நன்றிகள் .ஜி .நம்ம லயன் வாசகர்கள் அனைவருக்கும் இது சென்று சேர வேண்டும் .அப்பாலிக்கா அந்த அனிமேட்டடு ப்ரமோ வீடியோ உருவாக்கினால் இவ்வளவு சீக்ரெட் ஆக வைக்காதீங்க .உடனே எங்களுக்கு தெரியப்படுத்துங்க ஜி .கரூர் ராஜ சேகரன்
ReplyDelete