THE SCULPTOR…………………………………
AUTHOR/CREATOR………………….SCOTT McCLOUD
PUBLISHER……SELFMADE HERO(IN ARRANGEMENT WITH
FIRSTSECOND PUBLISHERS)
RELEASED………………FEBRUARY 2015
PAGES….490
டேவிட் ஸ்மித் ஒரு இளம்சிற்பி......இதுவரை ஆதரவு அளித்து வந்த
கோடீஸ்வர ஸ்பான்சர்
திடீரென ஆதரவை விலக்கி கொண்டதால் வறுமையின் பிடியில் சிக்கி
கொள்கிறான்.
தொடர்ந்த இரண்டு வருடங்கள் இப்படி கழியவே விரக்தியும், தன்னிரக்கமும் அவனை
ஆட்கொள்கின்றன.அவனது சிற்ப கலை மேல் உள்ள அளவிட முடியாத ஆர்வம் மட்டுமே
அவனை
கொஞ்சமேனும் உயிர்ப்புடன் வைத்திருக்கிறது.....
மிகவும் சிரமமான வறிய நிலையில் அவனது இறந்து போன மாமா ஹாரி வடிவில்
“மரணம்”அவனை சந்திக்கிறது.
மரணம் இரண்டு வாய்ப்புகளை அவன் முன்
வைக்கிறது..
1.அவன் பக்கத்து நகரம்
செல்லலாம். சிற்பகலை ஆசிரியராக பணி புரியலாம்.மனைவி,
குழந்தைகள், குடும்பம் என
அமைதியான வாழ்க்கை நெடுங்காலம் வாழலாம்....
2.அல்லது அவன்
கைகளுக்கு சிறப்பு வரம் அளிக்கப்படும்.உளி,சுத்தி வேறு எந்த உபகரணங்கள்
ஏதுமின்றி
அவன் மனம் நினைப்பதை அவன் எந்த திடபொருளை தொட்டாலும் அவன் கைகள்
அதனை சிற்பமாக
மாற்றி விடும்....
ஆனால் அவன் வாழ்நாட்கள் 200 நாட்கள் மட்டுமே.
இந்த விஷயத்தை அவன் பகிரும் ஒவ்வொரு நபருக்கும் அவன் 200 வாழ்நாட்களில் மூன்று
தினங்கள் குறைந்து
விடும்.
எதிர்பார்ப்பது போல் இரண்டாவது வாய்ப்பையே ஸ்மித் தேர்ந்தெடுக்கிறான்.
சிற்ப கலைக்கு தன்னை அர்ப்பணிக்க நினைக்கும் ஸ்மித்தின் வாழ்வில் மெக் என்ற
பெண்ணின்
வடிவில் விதி விளையாடுகிறது
மெக் மேல் காதல் வசப்படும் ஸ்மித்தின் மனதில் புயல் வீச துவங்குகிறது..
கலை ,கலைக்காகவே என்ற உணர்வில் வாழும்
ஸ்மித்தின் கழிவிரக்கம், காதல், அவனது நட்பு
இதில் அழகாக சொல்லப்பட்டு
இருக்கிறது.....
முடிவு என்னவாக இருக்கும்?
இந்த நாவலை எழுத வரைய ஸ்காட்டுக்கு ஐந்து வருடங்கள் பிடித்திருக்கிறது.....
2015-ன் டாப் டென் கிராபிக் நாவல்களுக்கான ரேசில் இது இருப்பதாக சொல்லபடுகிறது...
No comments:
Post a Comment