Tuesday, 1 September 2015

SECONDS

SECONDS

AUTHOR /ARTIST/ CREATOR…………………..BRYAN LEE O’MALLEY

DRAWING ASSISTANT………………………………JASON FISCHER

PUBLISHER…………………………………………..BALLANTINE(NEWYORK)

RELEASED…………………………………JULY 2014

CHARACTERS

1.KATIE
2.MAX (ex boyfriend)
3.HAZEL (co worker-waitress)
4.ANDREW (co worker –linecook)
5. LIS( house spirit)
6.ARTHUR(co founder of the restaurant-SECONDS)
கேட்டி.செகண்ட்ஸ் எனும் ரெஸ்டாரென்ட்-ல் –திறமையான இளம் CHEF.அதே உணவு விடுதியின் சிறிய மேல் அறை ஒன்றில் வசித்து வருகிறாள்.

தனக்கே சொந்தமான ஒரு உணவு விடுதி ஆரம்பிப்பதே அவள் லட்சியம்.ஒரு நாள் ஹசல் எனப்படும் சக ஊழியரான பெண்ணின் கையில் கேட்டியின் கவனகுறைவால் தீப்புண் ஏற்படுகிறது.
இதை நினைத்து வருந்தும் கேட்டியின் அறையில் அன்று இரவு லிஸ் எனப்படும் ஒரு சிறு பெண் தோன்றுகிறாள்
.
இந்த தவறை நீ சரி செய்து கொள்ளலாம்.

அந்த அறையில் உள்ள மேஜையின் இழுப்பறையில் ஒரு டைரியும் ஒரு மாயகாளானும்இருக்கும்
.
கேட்டிசெய்ய வேண்டுவதெல்லாம்

1.தனது தவறை அந்த டைரியில் எழுத வேண்டும்
2.மாய காளானை உன்ன வேண்டும்.
3.உடனே தூங்க போக வேண்டும்
4. எழும்போது தவறு சரிசெய்யப்பட்டு இருக்கும்.

இதை செய்து பார்க்கும் கேட்டி தனது தவறு சரி செய்யப்பட்டு இருப்பதையும். ஹசலின் கையில் தீப்புண் ஏதுமில்லை என்பதையும் அப்படி ஒரு சம்பவம் நடந்ததாக கூட ஹசல் உணரவில்லை என்பதையும் அறிகிறாள்.

பின்னர் தான் புதிதாக ஆரம்பிக்கவிருக்கும் உணவு விடுதி தொடர்பான முடிவுகள், முன்னாள் பாய் பிரண்ட் மாக்ஸ்=உடனான தொடர்பு சம்பந்தமான முடிவுகள்,பிற மனிதர்களுடனான உறவுகள் என ஒவ்வொன்றுக்கும் மாய காளான்களை நாடுகிறாள்.(செகண்ட்ஸ் மரபலகை அடியில் இவை நிறைய கிடைக்கின்றன)

லிஸ் குறுக்கிட்டு இப்படி செய்வது தவறு என உணர்த்த முயன்றும் பலன் அளிக்காது போகிறது.
தனது வாழ்க்கையை மிகவும் பர்பெக்ட் ஆக்க முயலும் கேட்டியின் எண்ணம் பலித்ததா?
வாழ்க்கையில் தனது தவறுகளை திருத்தி கொள்ள ஒரு சந்தர்ப்பம்- செகண்ட் சான்ஸ்- கிடைத்தால் நல்லதுதான்....ஆனால் அதுவே வாழ்நாள் முழுதும் கிடைக்க வேண்டும் என நினைத்தால்????

SECONDS…..ஒரு சுவாரஸ்யமான வாசிப்பு அனுபவம்.....















No comments:

Post a Comment